சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
போபாலுக்கு உதவ அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை… மாறாக சில அதிகாரிகள்தான் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றினார்கள் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.
இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும். ‘பீஸ்ட்’ பற்றிய எக்ஸ்க்ளூசிவ் நியூஸை ’வாவ் தமிழா’ உங்களுக்காக வழங்குகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறதாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.
பொதுவா திமுகவை தோற்கடிப்பதற்கான வியூகம்தான் விவாதிக்கப்பட்டிருக்கு. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படலை. அண்ணாமலைதான் அமித்ஷா சந்திப்பை ஆக்கிரமிச்சு இருந்தார்னு சொல்றாங்க.
முதல்கட்டமாக தனது மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைக்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்காவில் மட்டும் 400 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆடியோவில் இருப்பது தன் குரல் இல்லை என்று பொன்னையன் மறுத்துள்ள நிலையில், “அது பொன்னையன்தான். கடந்த 9-ம் தேதி பேசினேன்.” என்று குமரி கோலப்பன் கூறியுள்ளார்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.
இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.