No menu items!

மீண்டும் சர்ச்சைக்குள்ளான சென்சார் போர்ட்!

மீண்டும் சர்ச்சைக்குள்ளான சென்சார் போர்ட்!

செப்டெம்பரில் விஷால் தான் நடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு தணிக்கைச் சான்றிதழ் பெற, தணிக்கைச் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. 6.5 லட்சம் ரூபாயை கொடுத்தோம். இதற்கு ஒரு வழியே இல்லையா என்றபோது, ஒட்டுமொத்த இந்திய சினிமாவே அதிர்ச்சிக்குள்ளானது நினைவில் இருக்கலாம்.

விஷாலின் இந்த வாரியத்தின் குற்றச்சாட்டின் விளைவாக, இரண்டு மாதம் கழித்து மத்திய தணிக்கைச் சான்றிதழ் தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் பாகர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதனால் ஸ்மிதா வத்ஸ் ஷர்மா அப்பதவிக்கு வந்தார்.

மத்திய தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் என்ற குற்றச்சாட்டுகள் எழுவதற்கு விஷாலின் வார்த்தைகள் முக்கிய காரணமாயின.

‘மார்க் ஆண்டனி’ பட தணிக்கை பிரச்சினையே இன்னும் முழுமையாக ஒயாத நிலையில், தற்போது மீண்டும் புதிதாக சர்ச்சையொன்று வெடித்திருக்கிறது.

அதாவது தணிக்கைச் சான்றிதழ் வாரியத்தின் உறுப்பினர்கள் படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிப்பதற்கு தனிப்பட்ட முறையில் பணம் வாங்க இடைத்தரகர்களை வைத்திருக்கிறார்களாம். ஒவ்வொரு படத்திற்கும் பெரிய தொகையை இந்த இடைத்தரகர்கள் மூலம் வாங்கிய பின்பே தணிக்கைச் சான்றிதழை வழங்குகிறார்களாம்.

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா நடித்த ‘அனிமல்’ படத்தில் ஏடாக்கூடமான காட்சிகளும், வன்முறை காட்சிகளும் ஏராளமாகவே இருக்கின்றன. இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வெறும் 5 மாற்றங்களை பரிந்துரைத்தார்களாம். ஐந்து மாற்றங்களுக்குப் பிறகும் கூட ‘அனிமல்’ படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள். இப்போது இதுவும் விவாதத்திற்கு உள்ளாகி இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

தணிக்கைச்ச் சான்றிதழ் வாரிய உறுப்பினர்கள் முன்வைக்கும் கட் மற்றும் ம்யூட் சம்பந்தமாக, படைப்பாளிகள் தங்களது கருத்துகளை முன்வைக்க போதுமான நடைமுறைகள் இல்லை. அதேபோல் தணிக்கை வாரியம் கூறும் கட்களுக்கு எதிராக ஃப்லிம் சர்டிஃபிகேஷன் அப்பலேட் ட்ரிபியூனலில் முறையிட்டு உடனடியாக தீர்வு காண அதிகம் செலவு பிடிக்கிறது.

ஃப்லிம் சர்டிஃபிகேஷன் அப்பலேட் ட்ரிபியூனல் இப்போது இல்லாததால், சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுத்து அதற்கான தீர்வுகள் கிடைத்தப்பிறகே வெளியிட முடியும் என்பதால், பட வெளியீடுகள் திட்டமிட்டப்படி மேற்கொள்ள முடியவில்லை என்று படைப்பாளிகள்., தயாரிப்பாளர்கள் புலம்பல் அதிகமாகி இருக்கிறது.


பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன், பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போது வழங்கி வருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் அந்நிகழ்ச்சி முடிய இருக்கிறது.

இதனால் கமலின் அடுத்த திட்டம் என்ன கேட்டால், மணிரத்னத்துடன் இணையும் ‘தக் லைஃப்’ படம்தான் என்கிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதால், கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலிலேயே எடுக்கும் வகையில் திட்டமிட்டு இருக்கிறதாம். கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டால், அடுத்து அவர் தேர்தலி பரப்புரை செய்ய கிளம்பிவிடலாம் என்பதுதான் தற்போதைய திட்டமாம்.

இதனால் ‘தக் லைஃப்’ பட ஷூட்டிங் ஆரம்பம் குறித்து மிக விரைவிலேயே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

’விடாமுயற்சி’ ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றிருக்கும் த்ரிஷாவும் அதற்குள் சென்னைக்கு திரும்பிவிடுவார் என்பதால் திட்டமிட்டப்படி ஷூட்டிங்கை முடித்துவிடலாம் என மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.

இப்படி கமல் தேர்தல், மணிரத்னம் என கிளம்பினால் அவரை நம்பி இவ்வளவு நாட்களாக கூடவே இருந்துவந்த ஹெச். வினோத் நிலைமை என்னவாகும் என்றால், அவர் முன்பதிவு செய்து ஆர்.ஏ.சி. பட்டியலில் காத்திருப்போரைப் போல, தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...