No menu items!

30 கோடி ரூபாய் செட் – Beast Exclusive!!

30 கோடி ரூபாய் செட் – Beast Exclusive!!

விஜய்யின் Beastஐ ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் ட்ரெய்லரை இந்தப்படம் கூர்க்கா, மால் காப், செக்யூரிட்டி போன்ற படங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. மனி ஹெய்ஸ்ட், வெப் சீரிஸில் வருவது மாதிரியான ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகவும் இண்டர்நெட்டில் ட்ரோலிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நெல்சன் எடுத்த டாக்டர் படம் தெலுங்கில் நானி நடித்த வெளியான ‘கிருஷ்ணர்ஜூனா யுத்தம்’ன் படத்தைத் தழுவிய கதைதான். இப்போது வேறு படங்களில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக காட்சிகளை உருவியிருக்கிறார் என்றும் முணுமுணுக்கிறார்கள்.

விஜய் யார் தெரியுமா என்று சொல்லும் எக்ஸ்ப்ளைனரை ஜார்ஜியா நாட்டில் ஷூட் செய்திருக்கிறார்கள்.

இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும். ‘பீஸ்ட்’ பற்றிய எக்ஸ்க்ளூசிவ் நியூஸை ’வாவ் தமிழா’ உங்களுக்காக வழங்குகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறதாம்.

விமானத்தில் பறந்து எதிரிகளை துவம்சம் செய்யும் ஆக்‌ஷன் காட்சிகளை இங்கு 15 நாட்கள் எடுத்திருக்கிறார்கள்.

அடுத்து சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டல் அருகே போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட்டில் எடுத்திருக்கிறார்கள். படத்தின் ஆர்ட் டைரக்டராக கிரண் இருந்தாலும், ஷாப்பிங் மால் செட்டை மும்பையைச் சேர்ந்த ஒரு ஸ்பெஷலிஸ்ட் டீம் உருவாக்கி இருக்கிறது. இதற்காக 30 நாட்கள் எந்தவிதமான இடைவெளியும் விடாமல் தொடர்ந்து உழைத்திருக்கிறார்கள்.

ஷாப்பிங் மால் செட்டில் திவீரவாதிகள்  ஷாப்பிங் செய்ய வந்தவர்களை பணயக்கைதிகளாக சிறை வைக்கும்  காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள். மாதக்கணக்கில் நிஜ மாலில் ஷூட் செய்ய முடியாது என்பதால், ஒரு உண்மையான மாலை போல் இந்த செட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் பட்ஜெட் மெகா பட்ஜெட். ஏறக்குறைய 30 கோடி செலவில் செட் போட்டிருக்கிறார்கள்.

கோவிட் பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த செட்டில் ஷூட் செய்ய முடியாமல் போனதால்,. செட்டை பராமரிப்பதற்கே கூடுதல் செலவு ஆனதாம். பீஸ்ட் யூனிட், சுமார் 60 நாட்கள் இந்த செட்டில் ஷூட் செய்திருக்கிறதாம்.

படம் வெளியான பிறகு, இந்த செட்டை ரசிகர்கள் பார்வைக்கு விடலாமா இல்லை ஒட்டுமொத்தமாக எடுத்துவிடலாமா  என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறதாம்.

  • வாவ் தமிழா டீம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...