No menu items!

ஷவர்மா வாங்கித் தரவில்லை – உடனே டைவர்ஸ்!

ஷவர்மா வாங்கித் தரவில்லை – உடனே டைவர்ஸ்!

“முன்பெல்லாம் தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து வாழ்வது கூட்டுக் குடும்பமாக இருந்தது. ஆனால் இப்போது கணவன் மனைவி சேர்ந்து இருந்தாலே கூட்டுக் குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது” என்று ஒரு மேடைப் பேச்சின்போது நகைச்சுவையாய் சொல்லியிருந்தார் நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன். அவர் அப்படி சொன்னது இப்போது நாளுக்கு நாள் உண்மையாகி வருகிறது. விவாகரத்து செய்துகொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விவாகரத்து விஷயத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக போர்ச்சுக்கல் இருக்கிறது. இங்கு 94 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரிசையில் போர்ச்சுக்கல்லுக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது இங்கு 85 சதவீதம் தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தம்பதிகள் விவாகரத்து செய்துவரும் நிலையில், இந்தியாவில் இன்னும் அந்த எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இங்கு 1 சதவீத தம்பதிகள் மட்டுமே விவாகரத்து செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் குறைந்த அளவிலான தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்ளும் நாடாக இந்தியா இருக்கிறது.

வாழ்க்கைத் துணை தங்களுக்கு துரோகம் செய்வது, பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாமல் போனது, பொருளாதார அழுத்தம் ஆகியவை விவாகரத்துக்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்த சூழலில் வினோதமாக என்னென்ன காரணங்களுக்காக தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்கின்றனர் என்று வித்தியாசமான ஒரு வீடியோ பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தான்யா அப்பு கவுல். இவர் விவாகரத்து தொடர்பான வழக்குகளில் அதிகம் ஆஜராகுபவர். இது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற பெண்களை கவர்ச்சிகரமாக பார்க்க விரும்பும் ஆண்கள், தங்கள் மனைவி கவர்ச்சிகரமாக உடை அணிவதை விரும்புவதில்லை. ‘மனைவி ஆபாசமான முறையில் உடைகளை அணிகிறார்’ என்ற காரணத்துக்காக சில ஆண்கள் விவாகரத்து வழக்கு தொடர என்னை அணுகியுள்ளனர்.

அதுபோல் ‘கணவர் முழு நேரமும் யுபிஎஸ்சி தேர்வுக்காக படித்து வருகிறார். என்னை கவனிக்க அவர் நேரத்தை செலவிடுவதில்லை’ என்று சொல்லி தன்னுடைய ஒரு கட்சிக்காரர் கணவரிடம் இருந்து டைவர்ஸ் கேட்டதாக இந்த வீடியோ பதிவில் அவர் சொல்லியிருக்கிறார்.

கணவர் தனக்கு ஷவர்மா வாங்கித் தராததால், மனைவி அவரை டைவர்ஸ் செய்த சம்பவம்கூட நடந்திருக்கிறது என்கிறார் தான்யா அப்பு கவுல். இதுபற்றி குறிப்பிட்டுள்ள அவர், “எகிப்து நாட்டில் திருமணமாகி 40 நாட்களே ஆன நிலையில் ஒரு தம்பதி ஷாப்பிங் சென்றிருக்கிறது. அப்போது தனது கணவரிடம் ஷவர்மா வாங்கித் தருமாறு மனைவி கேட்டிருக்கிறார். அதற்கு கணவர் மறுத்திருக்கிறார். மேலும் மனைவி தனது பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதாக விமர்சித்துள்ளார். இதனால் அந்த மனைவி கணவரை விவாகரத்து செய்தார்” என்று இந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...