சுதா கொங்குரா படம் தள்ளிப் போனால், ‘வாடிவாசல்’ மேலும் தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வாடிவாசலைத் தவிர்க்கவே சூர்யா இப்படி செய்கிறாரா என்ற யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.
தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
அதன்படி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டதும் காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி மூவரும் இறங்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.
ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜிதின் என்பவரிடம் துணை நடிகை லிண்டா என்பவர் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைகள் கோபத்தில் தடம் புரண்டிருக்கின்றன.