No menu items!

பூஜா ஹெக்டே காதல் – யார் அந்த கிரிக்கெட் வீரர்?

பூஜா ஹெக்டே காதல் – யார் அந்த கிரிக்கெட் வீரர்?

’முகமூடி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கிய இப்படத்தில் ஜீவா ஹீரோ. ஆனாலும் படம் வந்த வேகத்தில் வசூலை முடித்து மூடி கொண்டது.

இதனால் பூஜா ஹெக்டேவை ராசியில்லா நடிகை என்று வழக்கமான ஒரு முத்திரையைக் குத்தி இங்கேயிருந்து அனுப்பி வைத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் பாலிவுட் போனவருக்கு அங்கேயும் கட்டம் சரியில்லாததால், அதே வேகத்தில் டோலிவுட்டுக்கு கிளம்பினார்.

ஆனால் சினிமாவை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள், பூஜாவையும் ஹிட் பட நாயகியாக கொண்டாடினர்.

ஆனால் உச்சத்தில் இருக்கும் போதே, பூஜாவை அதிர்ஷ்ட தேவதை கைவிட்டுவிட, அடுத்தடுத்து தோல்விப் படங்கள்.

இந்நிலையில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொண்டுத்தார். ஆனால் விஜய்க்கும் நேரம் சரியில்லை என்று சொல்லும் அளவிற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்றது பீஸ்ட்.

ஆக மீண்டும் தமிழ் பக்கம் வரமுடியாத அளவிற்கு பூஜாவுக்கு நெருக்கடிகள். ஆனாலும் ’பையா -2’ வை எடுக்க திட்டமிட்டு இருக்கும் லிங்குசாமி, பூஜாவை ஒப்பந்தம் செய்ய கிளம்பினார். ஆனால் எடுத்த எடுப்பிலேயே 7 கோடி சம்பளம் என்று பூஜா கேட்க, பதைபதைத்து கிளம்பினார் லிங்குசாமி. இதனால் தேடி வந்த வாய்ப்பும் யு- டர்ன் போட்டு இடத்தை காலிபண்ணியது.

இப்படியொரு வரலாறு இருப்பதால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாமா என்றும் பூஜா யோசிப்பதாக கூறுகிறார்கள். திருமணம் பற்றி பூஜா யோசிக்க காரணம், காதல்தான். மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரரை பூஜா ஹெக்டே காதலிப்பதாகவும், அந்த வீரரும் பூஜாவைக் காதிலிக்கிறார் என்றும் கிசுகிசு கிளம்ப ஆரம்பித்து இருக்கிறது.

இந்த காதல் கிசுகிசு குறித்து பூஜா ஹெக்டே இதுவரை வாயைத் திறக்கவில்லை.


மிரட்டும் காந்தாரா -2 கதை களம்!

சுமார் 20 கோடி பட்ஜெட். ஆனால் 400 கோடிக்கும் மேல் வசூல். இப்படியொரு பிரம்மாண்டமான ஹிட்டை யாருக்கும் எதிர்பார்க்காத வகையில் பட்டென்று தட்டிச்சென்றது ‘காந்தாரா’.

’வராஹ ரூபம்’ ஊரெங்கும் ஒலிக்க, சுதாரித்து கொண்டார் இப்படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி. படபடவென ’காந்தாரா -2’ கதை தயார் என்றார். இதனால் காந்தாராவில் பணியாற்றிய அதே கூட்டணி மீண்டும் ’காந்தாரா -2’ பட வேலைகளில் இறங்கியது.

இப்போது இப்பட ஷூட்டிங் மும்முரமாக போய் கொண்டிருக்கிறது. இதனால் ’காந்தாரா -2’ பற்றிய தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

’காந்தாரா –2’ படமானது காந்தாராவின் தொடர்ச்சி அல்ல. அதாவது சீக்வல் இல்லை. காந்தாராவில் இடம்பெற்ற அந்த கடவுளின் தோற்றம் பற்றிய ப்ரீக்வல் ஆக இருக்கும்.

மேலும் இரண்டு காலக்கட்டங்களில் கதை நடைபெறும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

1970 மற்றும் 1980-களில் நடைபெறும் கதையாக ஆரம்பித்து, இரண்டாம் பாகம் 4-ம் நூற்றாண்டுக்கு பயணிக்கிறதாம். 4- ம் நூற்றாண்டு கதை என்றாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இருக்குமாறு பார்த்து பார்த்து ரிஷப் ஷெட்டி எழுதியிருக்கிறாராம்.

பான் – இந்திய படமாக ‘காந்தாராவ்-2’ முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், இந்த முறை ரிஷப் ஷெட்டி ஒரு பாலிவுட் நட்சத்திரத்தை கூட இதுவரையில் நடிக்க வைக்கவில்லையாம்.


அடித்து தூக்கும் லோகேஷ் கனகராஜ்!

இன்றைய தமிழ் இயக்குநர்களில் ராக்கெட் வேகத்தில் உச்சத்தைத் தொட்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

தான் இயக்கிய மூன்றே மூன்றுப் படங்களின் மூலம், தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் 30 இயக்குநர்களைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஒரே காரணம், விளம்பர யுக்தி.

கமலின் ‘விக்ரம்’ இந்தளவிற்கு பரபரப்பைக் கிளப்ப லோகேஷ் கனகராஜ் செய்த விளம்பர வித்தைகளும் ஒரு முக்கிய காரணம்.

இப்படி வெற்றியை ருசித்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், இப்போது லியோ படத்திற்கும் விதவிதமான போஸ்டர்களை வெளியிட்டப்படி இருக்கிறார்.

விஜயை வைத்து லியோ குழுவினர் வெளியிட்ட முதல் போஸ்டரில், ‘Keep Calm… Avoid the Battle’ என்ற வாசகத்துடன் பனிமலை பின்னணியை வைத்திருந்தது. அடிதடியே வேண்டாம் என அமைதியாக இருக்கும் விஜயைக் காட்டும் ஒரு போஸ்டராக இருந்தது.

இதற்கு அடுத்தடுத்து வெளிவந்த போஸ்டர்களில், ‘Keep calm… and plot your escape’, ‘Keep calm.. and prepare for battle’, ‘keep calm..and face the devil’ என போஸ்டரை பார்க்கும் விஜய் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்றிவிடும் வகையில் வாசகங்களைப் பயன்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

முன்பெல்லாம் படம் வெளிவரும் போது மட்டும் போஸ்டர்களை வெளியிட்டு வந்த பாணியை மாற்றி படம் தொடங்கும் போது அதில் நடிப்பவர்களைப் பற்றிய போஸ்டர்கள், பிடிஎஸ் வீடியோக்கள், படம் வெளி வருவதற்கு முன்பு இசை வெளியீட்டு விழா போஸ்டர்கள் என படம் பற்றிய ஏதாவது ஒரு சுவாரஸ்யமான அம்சத்தை வெளியிட்டு புது விளம்பர பாணியை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த ட்ரெண்ட்டுக்கு நல்ல வரவேற்பு. இதனால் லியோ வியாபாரம் புது எல்லைகளைத் தொடலாம் என கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...