No menu items!

இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாட வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தேசிய கொடியை டிபியாக வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அரசு கட்டிடங்கள் தேசிய கொடியின் வண்ணங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கின்றன.

சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, இந்த கொண்டாட்டங்களுக்கு ஏற்ப இந்தியா வளர்ந்துள்ளதா? இந்திய மக்கள் மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு விடை தரும் வகையில், பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரவரிசையைப் (ரேங்க்) பார்ப்போம்…

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

சுதந்திரம் பெற்றபோது இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகவும் பலவீனமாக இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்புத் துறையில் இந்தியா வலிமையான இடத்தில் இருக்கிறது. மிகப்பெரிய ராணுவங்களின் வரிசையைப் பொறுத்தவரை இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த தரவரிசையில் அமெரிக்கா முதல் இடத்திலும் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா 3-வது இடத்திலும் உள்ளன.

இந்தியர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா?

சர்வதேச அளவில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைப்பற்றி ஐநா சபையின் Sustainable Development Solutions Network (SDSN) அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின்படி மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள நாடுகளில் 146 நாடுகளில் மட்டுமே இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் பின்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் 121-வது இடத்திலும், இலங்கை 127-வது இடத்திலும், நேபாளம் 84-வது இடத்திலும், வங்கதேசம் 94-வது இடத்திலும் உள்ளன.

வாழத் தகுதியான நகரங்கள் :

உலகிலேயே மக்கள் வாழ அதிக தகுதியான நகரங்களின் பட்டியலை எகனாமிஸ்ட் இண்டெலிஜன்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவ வசதி, நிலையான அரசு, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் புதுடெல்லி 140-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு நகரம் 146-வது இடத்தி்லும், மும்பை 141-வது இடத்திலும், அகமதாபாத் 143-வது இடத்திலும் உள்ளன. சென்னைக்கு இந்த பட்டியலில் 142-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகரம் முதல் இடத்தில் உள்ளது.

பத்திரிகை சுதந்திரம்

பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் ரேங்க் கொஞ்சம் மோசமானதாகவே இருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டில் 142-வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் மேலும் சரிந்து 150-வது இடத்தில் இருக்கிறது.

தொழில் வளர்ச்சி:

தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைவிட இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. Global Unicorn Index 2021-ன்படி இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

சுற்றுலா வளர்ச்சி:

அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளுக்கான Travel and Tourism Development Index 2021-ல் இந்தியா 54-வது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் ஜப்பான் நாடு முதல் இடத்தில் உள்ளது.

பாஸ்போர்ட்:

உலகில் மதிப்புவாய்ந்த பாஸ்போர்ட்களின் வரிசையில் (Henley Passport Index 2022) இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு 87-வது ரேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை வைத்துள்ள ஒருவர் 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதுபோல் 193 நகரங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...