No menu items!

கோடீஸ்வரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்?

கோடீஸ்வரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்?

‘எல்லாமே இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தானே’ என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அதற்காக தினசரி ஓடிக் கொண்டிக்கிறோம். இந்த ஒரு சாண் வயிறு சிக்கல் சாமானியர்களுக்குதான். சகலத்தையும் சம்பாதித்து உலக செல்வந்தர்கள் பட்டியலில் உச்சியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறார்கள்? பார்ப்போம்…

முகேஷ் அம்பானி:

நாளொன்றுக்கு சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர் முகேஷ் அம்பானி உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான, ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் முகேஷ் அம்பானி உணவைப் பொறுத்தவரை மிகச் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார்.

சைவ உணவை மட்டுமே சாப்பிடும் அம்பானியின் காலை உணவு வெறும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்தான். மதிய உணவுக்குகூட சாதமோ, சப்பாத்தியோ இல்லை. வெறும் காய்கள் பழங்கள் அடங்கிய சாலட்டும் சூப்பும்தான். இரவு நேரத்தில் மட்டும் சப்பாத்தியும் பருப்பு கூட்டும் சாப்பிடுகிறார்.

தென் இந்திய மற்றும் குஜராத்தி உணவுகளை விரும்பிச் சாப்பிடும் முகேஷ் அம்பானிக்கு மாதுங்காவில் உள்ள ‘மைசூரு கபே’யில் தென்னிந்திய இட்லி, தோசை மற்றும் சாம்பாரை சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அவ்வப்போது ரிலையன்ஸ் நிர்வாகிகள் அந்த மைசூரு கஃபேக்கு சென்று முகேஷ் அம்பானிக்காக தென்னிந்திய உணவுகளை வாங்கி வருகிறார்கள்.

எலன் மஸ்க்:

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலன் மஸ்க், டயட்டைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாதவர். உணவின் தரத்தையும் அதன் ஆரோக்கியத்தையும் விட சுவைதான் அவருக்கு முக்கியம்.

காலை 7 மணிக்கு காபி குடிக்கும் எலன் மஸ்க், அதன்பிறகு காலை உணவை எடுத்துக்கொள்வதில்லை. எப்போதாவது அபூர்வமாக ஆம்லேட் எடுத்துக் கொள்வார்.

மதியத்தில் பிரெஞ்சு உணவு வகைகள் அல்லது பார்பெக்யூ உணவை விரும்பிச் சாப்பிடுவார். காலை, மதியம் ஆகிய 2 வேளைகளைவிட இரவு நேரத்தில்தான் அதிகம் சாப்பிடுவாராம் எலன் மஸ்க்.

மதியம் அல்லது இரவு உணவின்போது தனது மனநிலைக்கு ஏற்ப பல்வேறு மதுவகைகளையும் விரும்பி அருந்துவார் எலன் மஸ்க்.

பில் கேட்ஸ்:

ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தும் நபர் பில் கேட்ஸ். அதனால் சத்தான, ஆரோக்கியமான உணவைத்தான் சாப்பிடுவார். காலை உணவை பெரும்பாலும் தவிர்க்கும் பில் கேட்ஸ், மதியத்தில் சீஸ் பர்க்கரை விரும்பிச் சாப்பிடுவார். குடிப்பதற்கு டயட் கோக். இரவு நேரத்திலும் பர்கர்தான். காலை, மாலை இரவு என எந்த நேரமாக இருந்தாலும் அவர் டயட் கோக்குடன்தான் பெரும்பாலும் இருப்பார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

ஜெஸ் பெஸாஸோஸ்:

காலை உணவை தவற விடவே கூடாது என்ற கொள்கையை உடையவர் ஜெஸ் பெஸாஸோ. அமேசான் நிறுவனத்தின் தலைவரான இவருக்கு, காலை உணவை ஆர அமர சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். அதனாலேயே யாருக்கும் அந்த நேரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க மாட்டாராம். முட்டை, வெங்காயத் தாள், ஆக்டோபஸ், யோகார்ட் என காலை உணவை பொளந்து கட்டுவார் ஜெஸ் பெஸாஸோ. மதியம் தாய்லாந்து நாட்டு உணவு.

வாரன் பஃபெட்:

“6 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவு. அதனால் அவர்களின் உணவையே நான் சாப்பிடுகிறேன்” என்கிறார் வாரன் பஃபெட்.

அவரது காலை உணவு சாக்லேட் சிப் ஐஸ்கிரீம். மற்றபடி நாளொன்றுக்கு நிறைய பேக்கட் சிப்ஸ், 5 கேன் கோக் ஆகியவைதான் வாரன் பஃபெட்டின் உணவு.
ஓபரா வின்ஃப்ரே:

ஹார்போ புரோடக்ட்ஸ் அண்ட் சேர் நிறுவனத்தின் தலைவரான ஓபரா வின்ஃப்ரேவின் சொத்து மதிப்பு 250 கோடி அமெரிக்க டாலர்கள். ஆனால் உடலை கச்சிதமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக டயட்டை தீவிரமாக கடைபிடிக்கிறார் ஓபரா வின்ஃப்ரே.

காலையில் வதக்கிய முட்டை அல்லது சாண்ட்விட்சை மட்டுமே சாப்பிடுகிறார். வித்தியாசமாக சில நாட்களில் ஸ்மூத்தி (Smoothie)சாப்பிடுவார். மதியம் சூப் அல்லது சாலட் சிறிதளவு எண்ணெயுடன். இரவில் காய்கறிகளுடன் கொஞ்சம் ப்ரைட் ரைஸ். அல்லது சாதமும் மீனும். கொஞ்சம் ஒயின். சில நாட்களில் பாஸ்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...