இந்தியாவுக்கான சீன தூதர் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை வெளியிட்டு இந்தியாவுடனான நட்புறவை நிலைநாட்டும் வகையில் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை சீனா ஏமாற்றி வருவதாக அஞ்சு பாபி ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று ஈட்டி எறியும் போட்டியில் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நீரஜ் சோப்ராவும் கூறியிருக்கிறார்.
குமாரசாமி இன்னும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘அஜய் தேவகன் பாஜகவின் குரலாக உளறியிருக்கிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி என்ற இந்தி தேசியவாதத்தின் அடிப்படையில் இப்படி கூறப்பட்டிருக்கிறது. இந்தி படங்களைவிட கன்னடப் படங்கள் வளர்ந்திருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.
சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இளையவர்களை, வளர்ந்து வரும் ஓவியர்களைப் பாராட்டி ஊக்கம் தந்து வளர்த்துவிடும் அவரின் மாண்பு பாராட்டுக்குரியது. அவர் தன்னுடைய உயரங்களை என்றும் தலைக்கு மீது ஏற்றிக் கொண்டதில்லை.