No menu items!

செக்ஸ் ஈர்ப்பு – சென்னை பேரணி சொல்வது என்ன?

செக்ஸ் ஈர்ப்பு – சென்னை பேரணி சொல்வது என்ன?

சென்னையில் சமீபத்தில் நடந்த ப்ரைட் வாக் (Pride walk) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Pride walk, Pride month போன்ற வார்த்தைகளை நாம் கேள்விப்பட்டு இருந்தாலும், இந்திய மக்களுக்கு இந்த விஷயத்தில் சற்று புரிதல் குறைவு தான்.  இந்த நிலையில்தான் LGBTQIA+ சமூகத்தினர் இந்த பேரணியை நடத்தி உள்ளனர்.

முதலில் LGBTQIA+ என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்…

பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் பால் மற்றொருவருக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த இயல்பிலிருந்து சற்று மாறுபட்ட ஈர்ப்புகளையும் அதற்கேற்ற  பால் உணர்வுகளையும் கொண்ட சமூகத்தை LGBTQIA என்கிறோம்.

L – Lesbian  ( பெண்ணும் பெண்ணும் ஈர்ப்பு கொள்வது )

G – Gay ( ஆணும் ஆணும் ஈர்ப்பு கொள்வது )

B – Bi-sexual ( ஆண், பெண் இருவர் மீதும் ஈர்ப்பு கொள்வது )

T – Transgender ( முழுமையாக தன்னை வேறு பாலினத்தவராக உணர்ந்து, மாற்றிக் கொள்பவர்)

Q – Queer ( இயல்புக்கு மாறான பாலுணர்வுகளை கொண்டவர்)

I – Intersex ( பிறப்பிலேயே ஆண் பெண் பாலின அடையாள வகைக்குள் பொருந்தாதவர் )

A – Asexual ( பாலுணர்வுகள் இல்லாத அல்லது பாலுறுப்புகள் அற்றவர் )

இந்த பிரிவுகளில் வருபவர்களைத்தான் LGBTQIA சமூகத்தினர் என்கிறோம்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், “இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்,” என்று செக்ஷன் 377 கூறியது. பல ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்த இந்த சட்டத்தை 2009- ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் ரத்து செய்தது.

அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு,  ’சட்டப்பூர்வ வயது வந்தோர் ஒரே பாலினத்தவராக இருந்தாலும், சுயவிருப்பத்துடன் பாலுறவு கொள்வதில் தவறில்லை’ என்று கூறி 377வது பிரிவை சக்தியிழக்க செய்தது.

தங்களது பாலுணர்வை பலரும்  வெளிப்படையாக சொல்ல, இந்த தீர்ப்பு உதவியது.

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ப்ரைடு மந்த் (Pride month ) என்று ஜூன் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2009 முதல் இந்த மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  அனைத்து பாலின அடையாளம் கொண்டவர்களும், அவர்களின் தனிப்பட்ட பாலுணர்வை அங்கீகரிக்கும் விதமாக இந்த மாதத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற Pride பேரணி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

`என் உடல் என் உரிமை’, `காதல் பொது மொழி’, `நாங்கள் எதிர்ப் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’ இப்படி பல வாசகங்களை ஏந்தி பேரணியாக சென்றனர் இந்த ஈர்ப்பு உடையவர்கள்.

377 தடையை நீக்கிய அரசிடம், தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டங்கள் வேண்டும் என்றும் படிப்பு வேலை ஆகியவற்றில் அவர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு பற்றியும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.  பாலுணர்வு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் தானே இதில் என்ன தவறு, என்றனர் சிலர். சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட நாங்கள் என்ன குற்றவாளிகளா என்கின்றனர் சிலர்.

மிகவும் கட்டுப்பெட்டி நகராக வர்ணிக்கப்படும் சென்னையில் இது போன்ற பேரணி நடந்திருப்பது தமிழ் நாடு மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...