No menu items!

விஜயுடன் கூட்டணி சேரும் லாரன்ஸ்!

விஜயுடன் கூட்டணி சேரும் லாரன்ஸ்!

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய பாதிக்கும் மேல் முடிவடைந்து இருக்கிறது.

காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் முக்கிய காட்சிகளை ஷூட் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படம் உருவாக இருக்கிறதாம். இப்படத்தை அவரது குழுவில் இருக்கும் ரத்னகுமார் இயக்கவிருக்கிறார். ’ஆடை’ படத்தை அமலா பாலை வைத்து இயக்கிய அதே ரத்னகுமார்தான் இவர்.

ரத்னகுமாரின் நட்புக்காகவே இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க திட்டமிட்டு உள்ளாராம். இப்படத்திற்கான வேலைகள் இப்பொழுது ஆரம்பமாகி இருக்கிறது. இதில் ராகவேந்திரா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதை அடிப்படையாக வைத்து, லாரன்ஸை இப்போது லியோவிலும் நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். நட்புக்காக லாரன்ஸ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதற்காகவே லாரன்ஸ் கேரக்டர் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருப்பதாக லோகேஷூக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.


சூர்யாவின் ‘கங்குவா’ லேட்டஸ்ட்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் ஷூட்டிங் மளமளவென நடந்து வருகிறது.

சமீபத்தில் கொடைக்கானலுக்குச் சென்ற கங்குவா குழு அங்கிருக்கும் மலைப்பகுதிகளில் முக்கிய காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் சூர்யாவின் காதல் காட்சிகளும், ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக படக்குழுவிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

கங்குவாவில் இடம்பெறும் வரலாற்று பின்னணியிலான காட்சிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய இருக்கிறார்களாம். இதில் சூர்யாவுடன் பாலிவுட் இடையழகி திஷா பதானி நடிக்கவிருக்கிறார்.

’சீதா ராமம்’ புகழ் மிருனாள் தாகூரும் இப்படத்தில் இணைந்திருப்பதாகவும் தெரிகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இனி எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் சிறுத்தை சிவா.

17-ம் நூற்றாண்டில் தாக்கும் கொடிய நோயினால் உண்டாகும் அழிவையும், அதனால் கங்குவா எப்படி மறைந்தார் அவருடைய மரணத்திற்கு என்ன காரணமென 400 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள மருத்துவர்கள் அது குறித்து ஆராய்வதாகவும் கதை நகரும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...