No menu items!

சூர்யாவின் குட்டி போதி தர்மர்

சூர்யாவின் குட்டி போதி தர்மர்

நேற்று முதல் இணையத்தில் வைரலாகி இருப்பது சூர்யா, ஜோதிகா, சிவகுமார், கார்த்தி என குடும்பமாக சேர்ந்து கலந்து கொண்ட ஒரு கராத்தே நிகழ்ச்சியின் காணொலிதான். ஒரே காரணம் அதில் கராத்தே ப்ளாக் பெல்ட் வாங்கியது சூர்யா – ஜோதிகா தம்பதியின் மகன் தேவ்.

பொதுவாகவே சூர்யாவுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் அதிகம். நடிக்கவந்த பிறகு, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த போது யோகாவுடன், உடற்பயிற்சிகளையும் செய்ய ஆரம்பித்தார்.

தன்னை பேட்டி எடுக்க வரும் பத்திரிகையாளர்களிடம், நீங்கள் உடற்பயிற்சி செய்வது உண்டா, நடைப்பயிற்சி போவது உண்டா என்றெல்லாம் கேட்பார். யாராவது இல்லையென்று சொன்னால், அப்படியானால் உங்க உடம்பை பேண்ட் ஷர்ட் போடுகிற ஸ் டாண்ட் மாதிரிதான் வைத்து கொள்கிறீர்களா என்று ஜாலியாக கிண்டலடிப்பார். அந்தளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவார்.

இப்பேர்பட்டவர், திருமணம் ஆனதும் தனது காதல் மனைவி ஜோதிகாவையும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட செய்திருக்கிறார். முன்பெல்லாம் ஒரு சில உடற்பயிற்சிகளை மட்டுமே செய்து வந்த ஜோதிகாவை இப்போது ஜிம்மில்தான் அதிகம் பார்க்க முடிகிறது என்றால் ஒரே காரணம் சூர்யாதான்.

இந்த மாதிரியான சூர்யா தனது மகன் என்று வரும்போது சும்மா இருப்பாரா அதனால்தான் சிறுவயதிலிருந்தே தனது மகன் தேவ்விட கராத்தே கற்றுக்கொள்ள வைத்துவிட்டார். 2019-ம் ஆண்டுவாக்கிலேயே ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் தேவ் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் 40 கலந்து கொள்ள அதில் வெற்றி பெற்றார் தேவ். குறிப்பாக தண்டர்கேக் பிரிவில் தேவ் பட்டம் பெற்றார். மகனின் திறமையப் பார்க்க சூர்யாவும் ஜோதிகாவும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியிலும் மீண்டும் வாகை சூடியிருக்கிறார் சூர்யாவின் குட்டி போதி தர்மர் தேவ்.

சூர்யா – ஜோதிகா ஜோடியின் மூத்த மகள் தியாவும் விளையாட்டில் அதிக ஆர்வமுள்ளவர். இவர் கிரிக்கெட் விளையாட்டில் மாநில ஜூனியர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலியிடமிருந்து விருதும் வாங்கியிருக்கிறார்.

இந்த இருவரின் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு அழைத்துச் செல்வது, கூடவே இருந்து தேவையான உதவிகளை செய்வது எல்லாமே ஜோதிகாதான். பணியாட்கள் இருந்தாலும், ஜோதிகா யாரையும் இதில் சேர்ப்பதில்லை. சில சமயங்களில் புல்லட்டில் இவர்கள் இருவரையும் ஏற்றிகொண்ட்டு பயிற்சிக்கு அழைத்து செல்வது ஜோதிகாவுக்கு பிடித்த விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...