No menu items!

வாவ் எதிர்காலம்: முதல்வர் ராசி எப்படியிருக்கு?

வாவ் எதிர்காலம்: முதல்வர் ராசி எப்படியிருக்கு?

ஜோதிடர் முனைவர். ந. ஞானரதம் M.A., M.PHIL., PH.D.,

josiyar gnanaratham

வார ராசி பலன்: ஏப்ரல் 18 – 24 வரை

மேஷம் – பணவரவு திருப்திகரமாக இருக்கும்

புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் நல்ல லாபத்தை காணும். வழக்கு சாதகமாகும். வழக்கறிஞர்களின் புகழ் ஓங்கும். உறவினருடன் விடுமுறையைக் கழிப்பீர்கள். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட தேதிகள்: 7, 25

ரிஷபம் – படிப்பில் ஆர்வம் பிறக்கும்

கையில் சரளமாக பணம் புழங்கும். கணவன் – மனைவி இடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்தின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடனான தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: சிவப்பு, ஊதா

அதிர்ஷ்ட தேதிகள்: 20, 22

மிதுனம் – புது வீடு வாங்குவீர்கள்

தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது இடம் அல்லது புது வீடு வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், கரும்பச்சை

அதிர்ஷ்ட தேதிகள்: 22, 24

கடகம் – வசதி வாய்ப்புகள் கூடும்

தங்க ஆபரணங்களை வாங்குவீர்கள். புதிய வாகனத்தை வாங்க பழைய வாகனத்தை விற்று விடுவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: பச்சை, கடல் நீலம்

அதிர்ஷ்ட தேதிகள்: 18, 21

சிம்மம் – தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும்

சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விஷ்யத்தில் கையொப்பமிட வேண்டாம். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

அதிர்ஷ்ட தேதிகள்: 20, 22

கன்னி – வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்

உயர்கல்வியில் வெற்றி உண்டு. மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: ரோஸ், கிரே

அதிர்ஷ்ட தேதிகள்: 21, 24

துலாம் – பண விஷயத்தில் கவனம் தேவை

செல்வாக்கு கூடும். பழைய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அக்கம் பக்கத்தினர் தங்களுக்கு தேடி வந்து உதவுவர். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கவனமுடன் இருப்பது அவசியம். பிள்ளைக்காக ஏங்கியவர்களின் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கருப்பு

அதிர்ஷ்ட தேதிகள்: 19, 23

விருச்சிகம் – தடைகள் நீங்கும்

கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் நல்ல விதத்தில் முடியும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கருப்பு

அதிர்ஷ்ட தேதிகள்: 18, 21

தனுசு – பிரபலங்களின் நட்பு கிடைக்கும்

வீட்டிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அரசுத் தேர்வு எழுதும் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், கருப்பு

அதிர்ஷ்ட தேதிகள்: 20, 23

மகரம் – பெரிய காரியங்களை முடிப்பீர்கள்

உங்கள் உறவினர் மற்றும் மனைவி வழி உறவினர்களிடம் சண்டையை தவிப்பது நல்லது. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைஅடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். தாங்கள் நினைத்த இடத்தில் சொத்து வாங்குவீர்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், கருப்பு

அதிர்ஷ்ட தேதிகள்: 21, 24

கும்பம் – அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்

பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், கருப்பு

அதிர்ஷ்ட தேதிகள்: 18, 22

மீனம் – முன்கோபத்தை தவிர்த்துவிடுங்கள்

பெண்களுக்கு இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள்.

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், கருப்பு

அதிர்ஷ்ட தேதிகள்: 19, 23

இந்த வார ஸ்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

புகழ் ஓங்கும். ஒருசில அவப்பெயர்கள் வந்தாலும், பின்னர் அவையே புகழ்சேர்க்கும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...