No menu items!

வலி மிகுந்த வெற்றி – அல்டிமேட் அஜித்

வலி மிகுந்த வெற்றி – அல்டிமேட் அஜித்

மே 1 அஜித் பிறந்த நாள். ரசிகர்கள் கொண்டாடும் ’AK’ பற்றிய சில அல்டிமேட் விஷயங்கள், ’வாவ் தமிழா.விற்காக…

வலி மிகுந்த வெற்றி:

’AK’ நடித்த ’வேதாளம்’ படம், 2016 நவம்பர் 9-ம் தேதியன்று வெளியானது. இயக்கம் சிறுத்தை சிவா.

மாஸ் பாடலான ‘ஆலுமா டோலுமா’ பாடலை எடுக்க, ’AK’ கொடுத்திருந்த கால்ஷீட்டின் போது அவரது முட்டியில் திடீரென வலி. லட்சக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் பாடல், தன்னால் தடைப்பட்டு விடக்கூடாது என வலியோடு பாடலை முடித்து கொடுத்தார்.

அடுத்து சண்டைக்காட்சிகளின் ஷூட். பரபரப்பாக நடித்துகொண்டிருக்கும் போது தோள்பட்டையில் எதிர்பாராத காயம். அடுத்தடுத்து வலி, காயம் என்பதால், இப்போது சிகிச்சை எடுத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ’AK’-ன் இரண்டு முட்டிகள் மற்றும் தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்தே ஆகவேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். முதலில் ஒரு முட்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்யலாம். அது குணமாக 3 மாதம். அடுத்த முட்டிக்கு 3 மாதம். தோள்பட்டைக்கு 4 மாதம்.. அதனால் ’AK’ நார்மலாக மொத்தம் 10 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் குழு ஷாக்கிங் ரிப்போர்ட் அளித்தது.

ஃபைனான்ஸ் வாங்கி படமெடுக்கும் சினிமாவில் பத்து மாத காத்திருப்பு என்பது, கோடிகளை ஃபைனான்ஸ் வாங்கி முதலீடு செய்யும் தயாரிப்பாளரை, ஷூட்டிங் மூலம் வருவாய் ஈட்டும் இதர டெக்னீஷியன்களை முற்றிலும் முடக்கிவிடும். ஹீரோவுடன் நடிக்கும் இதர பெரும் நட்சத்திரங்களின் கால்ஷீட்டை குளறுபடியாக்கிவிடும். பட்ஜெட்டில் வட்டி எக்ஸ்ட்ரா கோடிகளாக அதிகரிக்கும். இதனால் என்ன செய்வது திகைத்து நின்றது ‘வேதாளம்’ டீம்.

ஒரே நேரத்தில் மூன்று அறுவைச் சிகிச்சைகள். நான்கே மாதத்தில், எழுந்துவிடலாம். மற்றவர்களுக்கு உண்டாகும் இழப்பையும் தவிர்த்துவிடலாம் என்று ஏகே கூற அனைவருக்கும் மகிழ்ச்சி.

ஆனால் மருத்துவர்கள் குழுவோ அதற்கு அனுமதிக்கவில்லை. வலி மிக அதிகமிருக்கும். ஒரு சாதாரண மனிதரால் தாங்க முடியாது. தேவையில்லாத ரிஸ்க். வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் ’AK’, ’’என்னை நம்பி வந்தவர்களை என் சுயநலத்திற்காக காத்திருக்க வைக்க விருப்பம் இல்லை. அவர்கள் யாரும் என்னால் கஷ்டப்படக்கூடாது.’’ என்றார் ’AK’.

வேறு வழியில்லாமல் மூன்று அறுவைச் சிகிச்சைகளையும் அடுத்தடுத்து செய்வதற்கான வேலைகளில் இறங்கியது மருத்துவர்கள் குழு.

நவம்பர் 15-ம் தேதி, 2016 அன்று ’AK’-விற்கு அறுவைச் சிகிச்சை ஆரம்பித்தது. அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பித்த அறுவைச் சிகிச்சை, மறுநாள் காலை 4 மணி வரை நீடித்தது.


அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றன. .’வேதாளம்’ டீம் மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால் மருத்துவமனையில் இருந்த ’AK’,. நினைவு திரும்புகையில் வலியின் உச்சத்தில் துடித்துக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் ‘’வலியைத் தாங்க முடியாது. அதனால்தான் அடுத்தடுத்து. ஒவ்வொரு ஆபரேஷனாக பண்ணியிருக்கலாமே’’ என மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அறுவைச் சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே, அதாவது காலை 9 மணிக்கே, ‘நான் வீட்டுக்குப்போயே ஆகவேண்டும்’ என்றார் ’AK’. மருத்துவர்கள் அவருடைய வார்த்தைகளை சிரீயஸாக எடுத்து கொள்ளவில்லை. அறுவைச்சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்து காரணமாக மயக்கம் தெளியாமல் ஏதோ பேசுகிறார் என மருத்துவர்கள் நினைத்து கொண்டார்கள்.

’AK’-க்கு அறுவைச் சிகிச்சை, சங்கம் திரையரங்கிற்கு பின்பக்கமுள்ள குமரன் மருத்துவமனையில்தான் நடைப்பெற்றது. யதேச்சையாக ’வேதாளம்’ படம் சங்கம் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது.

’திரையரங்கும், மருத்துவமனையும் அருகருகே இருக்கும் தகவல் தெரிந்தால், ரசிகர்கள் அங்கு கூடிவிடுவார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வயதானவர்கள், குழந்தைகள் என மற்றவர்களுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படலாம், அதனால் உடனே கிளம்ப வேண்டும்’ என ’AK’ திரும்ப திரும்ப கூறினார். ’AK’ நினைத்தது போலவே மருத்துவமனையில் குவிந்தது ரசிகர்கள் கூட்டம். ‘ஐ டோண்ட் வாண்ட் டு டிஸ்டர்ப் பப்ளிக்’ என கிளம்பிவிட்டார் ’AK’.

ஸ்ட்ரெட்ச்சரில் சென்றால், தேவையில்லாத நெரிசல் ஏற்படும் என்பதால், வலியையும் பொருத்துகொண்டு தனது காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடி யாருக்கும் தெரியாமல் கிளம்பினார். ஏகே ஒரு ஆச்சர்யம்தான்.

’AK’ கட்டாய. ஒய்வு எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் குழு வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் முழு ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. இதனால் உடல் எடை கூடியதை அவரால் தடுக்க முடியவில்லை. முன்பிருந்ததைவிட இரு மடங்கு எடை கூடியது. இதனால் அவரால் சுலபமாக நடக்க முடியவில்லை. 24×7 இருந்த வலியால், எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சியையும் அவரால் செய்யமுடியவில்லை. ஒரு பக்கம் அறுவைச் சிகிச்சைகளில் இருந்து மீண்டு வருவதற்காக உட்கொள்ளும் மருந்துகளின் சைட் எஃபெக்ட், மறுபக்கம் உடற்பயிற்சிக்கு வாய்ப்பில்லாமை என்பதால், எடையைக் குறைப்பதற்கு என்ன மாதிரியான ட்ரீட்மெண்டை கையிலெடுப்பது என கலங்கி நின்றது மருத்துவர்கள் குழு.

ஆனால் மறுபக்கம் ’AK’, தனது வீட்டிற்குள்ளேயே மூன்று மாதங்களாக, கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கம் போல வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்க ஆரம்பித்தார்.

பக்காவான டயட்டை பின்பற்றினார், அவரது மன உறுதியே மருந்தானது. எடையும் குறைந்தது.

மக்களின் பிரார்த்தனைகளும், நல்லெண்ணங்களும்தான் தன்னை காப்பாற்றியிருக்கிறது. அதனால்தான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என ’AK’ மிக உறுதியாக நம்பினார்.

அதை எப்படி மக்களுக்குப் புரிய வைப்பது. என்று அவருக்குள் எழுந்த யோசனையின் பலனாகவே ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ‘சிக்ஸ் பேக்’ உடன் கம்பீரமாக தோன்றினார்.

இந்த சிக்ஸ் பேக்கை கடுமையான வலிக்கு இடையிலும் மேற்கொண்டார் என்கிறது ’AK’-ன் நண்பர்கள் வட்டாரம்.

’AK’ அதிகம் விரும்புவது சைக்கிளிங். வெளியூர்களில் ஷூட்டிங் இருந்தால், ஷூட்டிங் முடிந்ததும், சைக்கிளில் ரவுண்ட்ஸ் போவது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

ஷூட்டிங் இல்லாத நாட்களில். சைக்கிளிலேயே ஒரு லாங் ட்ரிப் அடிக்கிறார்.

பகலில் சைக்கிளிங் கிளம்பினால், கூட்டம் கூடும். பப்ளிக்குக்கு தொந்தரவு என்பதால் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு வேளைகளில் சைக்கிளிங் செய்கிறார் என்கிறது இவரது நட்பு வட்டம்.

சால்ட் & பெப்பர் ஸ்டைல்:

AK-ன் தனித்துவமான தோற்றத்திற்கு மெருகேற்றுவது அவரது சால்ட் & பெப்பர் லுக். ஏன் சால்ட் & பெப்பர் லுக்கை தனது தனித்துவமான அடையாளமாக வைத்து கொண்டார் என்பதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கிறது. ஏதாவது ஒன்று ஹிட்டானால், வைரல் ஆனால் அதற்கு நான் தான் காரணம் என க்ரெடிட் தேடிக்கொள்வதில் பலபேருக்கு மத்தியில் கடும் போட்டி இருக்கும். ஆனால் AK-ன் சால்ட் & பெப்பர் லுக்கிற்கு முழு க்ரெடிட்டும் அவரையே சேரும். உண்மையில் தனது 40-வது படத்தின் போதே, AK இது குறித்த ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

AK தனது 40-வது படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட் என்றால் ப்ரேக் நேரங்களில் ஜாலியான அரட்டைகள், சிரீயஸான பேச்சுகள் நடப்பது வழக்கம். AK-ன் 40-வது படமென்பதால், அவரது 50-வது படம் குறித்தும் பேச்சு எழுந்தது.

பட ஷூட்டிங்கின் போது, கேஷூவலாக பேசிக்கொண்டிருக்கும் போது ‘’ தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்ட்டில் 100 படங்களில் நடிப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 50 அல்லது 60 படங்கள் நடிப்பதே ஒரு பெரிய சாதனைதான். அதுவும் கமர்ஷியல் ஹீரோக்களுக்கு இருக்கும் எதிர்பார்புகளை எப்பொழுதும் முழுமையாக கொடுக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இதுவரை இருக்கும் க்ளிஷேக்களை உடைக்க விரும்புகிறேன். பப்ளிக் மத்தியில் நமக்கு இருக்கும் இமேஜை உடைப்பது போன்ற ஒரு படத்தில் நடிக்க ஆசை’’ என்று கேஷூவலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் AK.

AK-ன் ஆசைக்கு தீனிப் போடுவது போல் தானாக செட்டானது ‘‘மங்காத்தா’. ’மங்காத்தா’ படத்தில் முதலில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும், விவேக் ஒபராய் வில்லனாகவும், வெங்கட் பிரபுவின் வழக்கமான கம்பெனி ஆர்டிஸ்ட்களில் இரண்டு பேர் நடிப்பதாகதான் இருந்தது. அப்போதுதான் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை – 28’ படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

’சென்னை 28’, படத்தைப் பார்த்து இம்ப்ரஸ் ஆன AK அப்படக்குழுவினருக்கு விருந்தளிந்தார். கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கையில், வெங்கட் பிரபு தனது அடுத்த படம் பற்றிய ஒன் லைன்னை சொல்லியிருக்கிறார். அந்த ’ஒன் லைன்’ AK-க்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது.

அந்த நொடியே ’இந்தப் படத்துல நானே நடிக்கிறேனே’ என AK கேட்டிருக்கிறார். வெங்கட் பிரபுக்கு ஹை வோல்டேஜ் ஷாக். ’அண்ணே இது ஒரு சிம்பிளான ஒன் லைன். கதையில நெகட்டிவ் கேரக்டருக்குதான் முக்கியத்துவம் இருக்கும். அது மட்டுமில்லாம இது ஒரு க்ரே ஷேட் இருக்குற ஸ்டோரி. உங்களுக்கு மக்கள்கிட்ட இருக்குற இமேஜ்க்கு இது செட்டாகாது’ என்றது ’சென்னை-28’ டீம்.

‘ஐம்பதாவது படம்னு ஹைலைட் பண்றதுக்குன்னே நாம ஃபாலோ பண்ற இலக்கணங்களை உடைச்சு படம் பண்ணனும். அந்த மாதிரி படத்துல ஹீரோவை தூக்கி வைச்சு கொண்டாடுற க்ளிஷேவையும் உடைக்கணும்’,

என்ற AK ஸ்டேட்மெண்ட்டை கேட்டு ரிக்டர் ஸ்கேலில் குறிப்பிட முடியாத அளவிற்கு அதிர்ந்து நின்றது வெங்கட் பிரபு & கோ. அந்த சந்திப்பின் அடுத்தகட்டமாக அமைந்தது AK-ன் சால்ட் & பெப்பர் ஹேண்ட்சம் லுக்.

மரியாதை முக்கியம்:

AK-விடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று… அடுத்தவருக்கு மரியாதை கொடுக்கும் அந்த ஜென்டில்மேன் கேரக்டர். வழக்கமாக நாம் சந்திப்பவர்களிடம் ‘எப்படி இருக்கீங்க…?’, ‘ஹவ் ஆர் யூ ஜி’ என்று வார்த்தைகளால் கேட்பது மட்டுமே மரியாதை அல்ல. தன்னிடம் வேலைப் பார்ப்பவர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கான இடமளிப்பது, இரவு நேரமானால் அழைப்பதை தவிர்ப்பது, எப்போது பேசினாலும், ‘ is it right time to talk to you’ என கேட்டறிந்த பின்பே பேசுவது, டேபிளில் அமர்ந்தால், விருந்தாளிக்கான மரியாதை கொடுப்பது என எப்போதும் கவனமாக இருப்பார்.

சினிமாவை பொறுத்தவரை, எவ்வளவு பெரிய கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும், அவருடைய பாஸ் அவர் நடிக்கும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரே என்பது அஜீத்தின் பாலிஸி.

ஒரு படத்தில் நடிக்கும் போது, ஷுட்டிங்கிற்கு தன்னுடைய முந்தையப் படத்தின் தயாரிப்பாளரையோ அல்லது அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் தயாரிப்பாளரையோ வரவழைக்க மாட்டார் AK. காரணம் யாருக்கும் எந்தவிதமான முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்ற எண்ணமே.

AK-ன் முதல் மரியாதை பாலிஸிக்கு ஒரு சின்ன உதாரணம், மங்காத்தா படத்தில் அர்ஜூன் உடன் நடித்த அனுபவத்தை மேற்கோள் காட்டுகிறது கோலிவுட் வட்டாரம். ‘மங்காத்தா’ ஷூட்டிங்கில் அர்ஜூன் கலந்து கொள்ளும் முதல்நாள். அன்று AK-க்கு காட்சிகள் எதுவுமில்லை. ஆனாலும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார் AK. அர்ஜூன் வந்ததும், அவரை வரவேற்று, அன்று முழுவதும் அவருடனேயே இருந்தார். ஒரு சீனியர் ஹீரோ வரும்போது, மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் AK.

ராயும் மனம்:

AK-க்கு சினிமாவை பற்றி அதிகம் தெரியாது. எது சரியான கதை, எது வொர்க் அவுட் ஆகும் என்பதை சரியாக கணிக்கத் தெரியாத ஹீரோ என தமிழ்சினிமாவில் கிசுகிசுப்பது உண்டு. ஆனால் கணிப்பதில் AK, கில்லாடிதான். என்பது அவருக்கு நெருங்கிய வட்டாரம் மட்டுமே அறியும்.

அவரது சினிமா அல்லாத நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் குறிப்பிடும் சில விஷயங்கள் இதோ. ஹிட் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின், ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, அக்கதையின் ஒன்லைன் பற்றிய செய்தி AK–ன் காதுக்கு வந்தது. உடனே அவர் கேட்ட கேள்வி, ‘’இந்தக் கதையில நான் நடிக்கமுடியுமா? இந்தப்படம் ஷ்யூர் ஹிட்’’ என்றார்.

‘மங்காத்தா’ இப்படிதான் பெயர் வாங்குமென்பதையும், இடையில் மார்க்கெட் டல்லடித்த நிலையில் இருந்த நயன்தாரா நிச்சயம் பெரிய ரவுண்ட் வருவார் என ‘ஆரம்பம்’ படத்தில் டிஸ்கஷனில் சொன்னதையும் முதலிலேயே கூறியதை அவரது நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.

AK–வைப் பொறுத்தவரை எதையுமே இன்ச் இன்ச்சாக, பக்காவாக திட்டமிட்டு, செயல்படுவதே இல்லை. தனக்காக விஷயங்களை, ப்ளான் பண்ணி ஹிட்டாக்கும் ஸ்ட்ராட்டஜி டீம்மையும் வைத்துகொள்வதில்லை. எதையுமே அவரே முடிவு செய்கிறார் என்கிறது அவரது நட்பு வட்டாரம்.

ஏகேயின் கனவுப் படம்:

AK -ன் கனவுப் படம் இதுதான் என்றால் எல்லோரும் சந்தேகம் கண்டிப்பாக வரும். அப்படியொரு பழையப் படம் அது. பெயர் ‘பாதாள பைரவி’. அந்த காலத்தில் மாயஜால கலாட்டாவில் அதிரவைத்த அப்படத்தை, இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஹாலிவுட் பாணியில் எடுக்கும் போது, ரங்காராவ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டுமென்பது தலயின் நீண்ட நாள் கனவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...