இப்படத்தில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்கிறது வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய வட்டாரம். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு பிட் நோட்டீஸ் போட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு கதையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆகாஷ் அம்பானி தலைமையேற்றிருக்கும் ஜியோ நிறுவனனத்தின் இன்றைய மதிப்பு 95 ஆயிரம் கோடி ரூபாய். அவர் வாரிசாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.
அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.