No menu items!

சாய்பல்லவிக்கு ’நோ’ சொன்ன ஹீரோ!

சாய்பல்லவிக்கு ’நோ’ சொன்ன ஹீரோ!

கதாநாயகியை மையமாக கொண்ட Women Centric சப்ஜெக்ட்டா உடனே Sai Pallavi-யின் கால்ஷீட் இருக்கிற்தா என்று கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்’ என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சொல்லுமளவிற்கு ஒரு இமேஜை உருவாக்கி இருக்கிறார் சாய் பல்லவி.

இங்கு ‘கார்கி’ [Gargi] படத்திற்கு பிறகு சாய் பல்லவியிடம் கதாநாயகியை மையமாக கொண்ட கதைகளோடு படையெடுத்தவர்களின் பட்டியல் நீள்கிறது. ’இமெயிலில் கதை அனுப்புங்கள். படித்துவிட்டு சொல்கிறேன்’ என்ற சாய் பல்லவி அதற்கு பிறகு யாருக்கும் எந்தவித பதிலையும் சொல்லவில்லையாம்.

இப்படி சாய் பல்லவி ஒருபக்கம் நிராகரிக்க, மறுப்பக்கம் சாய் பல்லவியை நிராகரித்து இருக்கிறார் ஒரு கமர்ஷியல் ஹீரோ. ஆனால் இந்த சம்பவம் நடந்தது இங்கில்லை. அக்கட தேசத்தில்.

’பவதீயுடு பகத் சிங்’ என்ற ஸ்கிரிப்ட்டில் சிரஞ்சீவியின் தம்பியும், பவர் ஸ்டாருமான பவன் கல்யாண் [Pawan Kalyan] நடிக்க இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது. இந்த கதையின்படி இரண்டு ஹீரோயின்களாம். அதில் ஒருவராக பூஜா ஹெக்டே [Pooja Hegde] ஏறக்குறைய கமிட்டாகி விட்டாராம். இராண்டாவது ஹீரோயினாக சாய் பல்லவியை யோசித்திருக்கிறார் அப்படத்தின் இயக்குநர்.

சாய் பல்லவி என்ற பெயரைக் கேட்டதும், பவன் கல்யாண் ‘நோ’ என்று சொல்லிவிட்டார் என்று ஒரு கிசுகிசு பரபரப்பாகி இருக்கிறது.

’அவர் க்ளாமராக நடிக்க மாட்டார். எதைச் சொன்னாலும் தனக்கே உரிய ஸ்டைலில் நாசூக்காக மறுத்துவிடுவார். அதனால் வேண்டாம்’ என்று சொல்லியதாக பேச்சு அடிப்படுகிறது.

ஃப்ளாஷ் பேக்கில் கொஞ்ச மாதங்களுக்கு முன்பு போனால், சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ பட ததில் நடிக்க சாய் பல்லவியைக் கேட்டிருக்கிறார்கள். சிரஞ்சீவியின் தங்கை நீங்கள்தான் என்று தயாரிப்பாளர் தரப்பு சாய் பல்லவியிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘நோ’ என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சாய் பல்லவியிடமிருந்து பதில் வந்திருக்கிறது. இதனால்தான் பவன் கல்யாணும் சாய் பல்லவியை தவிர்த்துவிட்டாரா என்று முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது.


ரத்தன் டாடாவை கையிலெடுக்கும் சுதா கோங்கரா

’சூரரைப்போற்று’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சுதா கோங்கரா இப்போது மீண்டுமொரு பயோபிக் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

இந்த முறை அவர் கவனம் திரும்பி இருப்பது இந்தியாவின் அந்தகால நம்பர் ஒன் பணக்காரரான ரத்தன் டாடா [Ratan Tata].

பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் ரத்தன் டாடாவைப் பற்றி இந்த இளைய தலைமுறைக்கு சொல்லும்விதமாக ஒரு கமர்ஷியல் திரைப்படமாக எடுக்கும் எண்ணம் இருக்கிறதாம்.

இந்த முறை இப்படத்தில் சூர்யாவும் [Suriya], அபிஷேக் பச்சனும் [Abishek Bachchan] கைக்கோர்க்கலாம் என தெரிகிறது.

ரத்தன் டாடாவைப் பற்றிய தகவல் சேகரிப்பில் இப்பொழுது சுதா கோங்கரா குழு முழுவீச்சில் இறங்கியிருக்கிறது என்கிறார்கள். மேலும் இப்படத்தை ’சூரரைப் போற்று’ படத்தைப் போல் தமிழில் மட்டும் எடுக்காமல், ஒரு Pan India படமாக எடுக்கும் வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறதாம்.

ரத்தன் டாடா என்றால் இந்தியா முழுவதிலும் எளிதில் சென்றடையக்கூடிய வாய்ப்பு இருப்பதால்தான் இந்த முடிவாம்.


Vijay Sethupathy-க்குப் பதில் ராகவா லாரன்ஸ் – கைதி 2 Update

விஜயின் Thalapathy67-வது படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ படத்தை இயக்கவிருக்கிறார்.

’விக்ரம்’ படத்தின் க்ளைமாக்ஸை வைத்து ’கைதி 2’ திரைக்கதையில் ஒபனிங்கை வைக்க லோகேஷ் கனகராஜ் யோசித்துவருவதாக தகவல் அடிப்படுகிறது.

’Vikram’ படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் முடிவு வந்துவிடுவதால் என்ன செய்வது என்று யோசித்த லோகேஷ் டீம், விஜய் சேதுபதிக்குப் பதிலாக ’Rolex’ சூர்யா மற்றொருவரை அந்த இடத்திற்கு நியமிக்கிறார். அவர் ‘கைதி 2’-ல் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்குவதாக திரைக்கதையை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறார்களாம்.

அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்று யோசிக்கையில், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என கலக்கும் ராகவா லாரன்ஸை டிக் செய்திருக்கிறாராம் Logesh Kanagaraj.

இதனால் ‘விக்ரம்’ மற்றும் ’கைதி’ ஆகிய இரு படங்களின் கதாபாத்திரங்களை ஒரு களத்தில் கொண்டு வந்து ’Kaithi 2’ எடுக்க இருக்கிறார்கள். இந்த முயற்சியில் பங்கு பெற ராகவா லாரன்ஸூம் ஓகே சொல்லியிருப்பதாக கிசுகிசு அடிப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...