No menu items!

நியூஸ் அப்டேட்: தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி

நியூஸ் அப்டேட்: தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி

தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு செப்.28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்துக்கு தேவையான இடத்தை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை: ஜே.பி. நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில், ஜே.பி. நட்டாவிற்கு பாஜகவினர் மேள தாளங்களுடன், வழி நெடுகிலும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜே.பி.நட்டாவை மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய ஜேபி நட்டா, ‘மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்ட நிலையில், தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. தேவையான இடத்தை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை” என்றார்.

தமிழ்நாட்டில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதுஅரசு தகவல்

மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2021-2022 ஆண்டு தமிழ்நாட்டில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

14 வயது சிறுமியை திருமணம் செய்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் கைது

சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த நடராஜர் கோவில் தீட்சிதரான சோமசேகர், தனது 14 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர், சித்ரா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடராஜர் கோவில் தீட்சிதருடன் சிறுமிக்கு திருமணமானது உறுதியானது.

இதுகுறித்து சமூகநலத்துறையின் மகளிர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரது தந்தை சோமசேகர், திருமணம் செய்துகொண்ட தீட்சிதர் பசுபதி மற்றும் அவரது தந்தை கணபதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இனி எந்த அரசியல் கட்சிக்கும் பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘அரசியல் கட்சிக்காக பணியாற்றுவதை நிறுத்திவிட்டேன். இனிமேல் மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். பீகாரில் நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்ற திட்டமிட்டு உள்ளேன். பீகாரில் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செய்ய உள்ளேன். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத், மத்தியபிரதேசம், அல்லது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து ராகுல்காந்தி பிரசாரத்தை தொடங்கி இருந்தால் பயனுள்ளதாக இருந்து இருக்கும்’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...