No menu items!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் தொடங்கியது!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் தொடங்கியது!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராண அணியை உருவாக்க, தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் இன்று தொடங்கியது.

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார், அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரான், பகவந்த் சிங் மான், உத்தவ் தாக்கரே, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாயாவதி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாகவும், பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரள்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ இந்தியாவில் தற்போது சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்கான சித்தாந்தத்துக்கும், ஒற்றுமையை சிதைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையே இந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பாஜக பரப்பிக் கொண்டிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்துகிறது. நாம் அன்பையும் ஒற்றுமையையும் பரப்புவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் இன்று இங்கே ஒன்றுகூடி இருக்கிறோம்.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவை எங்கேயும் பார்க்க முடியவில்லை. அந்தக் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது. இந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏனெனில், நாம் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறோம். ஆனால், பாஜக 2-3 தொழிலதிபர்களின் நலனுக்காகப் பாடுபடுகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஆதரவைப் பெற்று வருகிறது. கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டது போல வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்’’ என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் மீண்டும் வருமான வரி சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் இவர்களுடன் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். தொடர்ந்து 8 நாட்கள் நடந்த இந்த சோதனை கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்தகட்டமாக கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, சகோதரர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று முன்தினம் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்நிலையில், கரூரில் இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.

இந்தியா 3ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறும்: அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி பேச்சு

இந்திய பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, “இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ரீதியிலான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம். இது இந்தியா-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஆகும். இந்தியா வளர்ந்தால் தான் உலகம் வளரும். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு ஏற்பட இரு நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகிறது” என்று கூறினார். இந்தியா

ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, 4 நாள் பயணமாக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என அதிமுக மனு அளித்த நிலையிலும், அமைச்சராக தொடர தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஆளுநரின் இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பிற ஆண்களை வைத்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ரசித்த கணவர்: 10 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டொமினிக் என்பவர் மனைவி பிராங்கோயிஸ் (வயது 70). இந்த தம்பதியருக்கு திருமணமாகி அரை நூற்றாண்டுகளை கடந்து விட்டது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டொமினிக்குக்கு போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவிக்கு போதை மருந்து கொடுத்து அவர் மயங்கி படுக்கையில் சாய்ந்த உடன் வெளியில் உள்ள ஆண்களை வீட்டுக்கு அழைத்து மனைவியுடன் உல்லாசமாக இருக்கச் செய்து அதனை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்து வந்துள்ளார், டொமினிக்.

2011 முதல் 2020 வரை இந்த கொடூரத்தை டொமினிக் அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில் கணவரின் கொடூர செயல்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தார், பிராங்கோயிஸ்.

போலீசார் டொமினிக்கை பிடித்து விசாரணை செய்ததில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் 92 பாலியல் பலாத்கார சம்பவங்களை உறுதி செய்தனர். இதில் 26 வயது இளைஞர் முதல் 73 வயது முதியவர் வரை மொத்தம் 51 ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கணவர் உள்ளிட்ட 51 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...