‘குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவினாலோ, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாலோ, கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தினாலோ 5 ஆயிரம் ரூபாய் அபராதம்’ என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.
கோடைக்காலத்தை சமாளிக்க நம் உடலின் தட்பவெட்ப நிலை அதிக மாறுதலுக்கு உள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், விதவிதமான நோய்களுக்கு நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுவோம்.
தமிழ் திரையுலகின் மூத்த கவிஞர் ஒருவரை சில காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் புறக்கணித்து வருகிறதாம். மறுபக்கம் அதிகார மையத்தில் அப்பா இருந்தபோது இருந்த மரியாதை மகனிடம் கிடைக்காததால் புழுங்குகிறாராம் கவிஞர்.
சிவகார்த்திகேயன் ‘தேடுறதுல கிடைக்கிற அந்த ஒரு நிமிஷத்துல வாழ்க்கை மாறிடும்’ என்று சொல்வார். அந்த ஒரு நிமிஷத்திற்காக ஒன்னரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார்கள். சரி கல்லூரி கதைதான் என்று நினைக்கும் போது, அப்பா சென்டிமெண்ட்டை வைத்து, க்ளீசரின் உதவி இல்லாமலேயே கண்களைக் குளமாக்குகிறார்கள்.
போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.
ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.