No menu items!

’லியோ’ ஷூட்டிங் சென்னையில் ஆரம்பம்!

’லியோ’ ஷூட்டிங் சென்னையில் ஆரம்பம்!

காஷ்மீரில் தொடர்ந்து சில வாரங்களாக ஷூட் செய்த லியோ படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பாகவே சென்னைக்கு திரும்பிவிட்டார்கள்.

காஷ்மீர் ஷூட்டிங் நடந்த இறுதி நாட்களில்தான் அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.

காஷ்மீருக்கு அடுத்து சென்னையில் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அதாவது மார்ச் 20=9-ம் தேதி சென்னை ஷெட்யூல் ஆரம்பமாகிறது.

சென்னையில் விஜய், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம், இங்கு இரண்டு வாரம் ஷூட்டிங் முடிந்ததும், ஒரு ப்ரேக்.

ப்ரேக்கிற்கு பிறகு கடைசி ஷெட்யூல்.  இதற்கான செட் வேலைகள் ஹைதராபாத் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் வேகவேகமாக நடந்து வருகின்றன. காரணம் மே மாதத்தில் ‘லியோ’ ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.


ஜெயிலர் – ரஜினி போட்ட கண்டிஷன்!

‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் திட்டமிட்ட நாட்களில் மளமளவென தவறாமல் நடந்து வருகிறது. அந்தளவிற்கு பக்காவாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக ரஜினி ரொம்பவே ஆர்வத்துடன் ஷூட்டிங்கிற்கு வருகிறாராம். ரஜினியின் ஆர்வத்தைப் பார்த்து, ஒட்டுமொத்த யூனிட்டும் இப்போது ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறதாம். ;இதனால் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடைய நிலையில் இருக்கிறதாம்.

சமீபத்தில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சியை கொச்சியில் எடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இதற்கு ஒரே காரணம் ரஜினிதான்.

மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சியை க்ரீன் மேட் போட்டு எடுத்துவிடலாம் என இயக்குநர் நெல்சன் திட்டமிட்டு இருந்தார். அதனால் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் க்ரீன் மேட் போட்டு ஷூட் செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள்.

இதைக்கேள்விப்பட்ட ரஜினி, ’என்னது க்ரீன் மேட்டா? நோ… நோ… மோகன் லால் எங்கே இருக்காரோ அங்கே போய் ஷூட் பண்ணுங்க.  உண்மையான லொகேஷன்ல ஷூட் பண்ணினால்தான் நல்லா இருக்கும். முடிந்தவரை லொகேஷன் விஷயத்துல இதையே ஃபாலோ பண்ணுங்க’ என்று கறாராக சொல்லிவிட்டதாக யூனிட்டில் கூறுகிறார்கள்.

இதனால் மிகப்பிரம்மாண்டமான மலை, அருவி காட்சியொன்றை க்ரோமா செட்டப்பில் எடுக்க இருந்ததையும் இப்போது மாற்றி இருக்கிறார்கள். ரஜினி போட்ட கண்டிஷனால் இந்த காட்சியை அதரப்பள்ளி அருவிப் பகுதியில் ஷூட் செய்திருக்கிறார்கள்.

இப்போது ஜெயிலர் ஷூட்டிங்கின்  இறுதி ஷெட்யூல் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு 10 நாட்கள் ஷூட் முடிந்துவிட்டால், ’ஜெயிலர்’ போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி விடுவார்.


ஸ்ருதி ஹாஸன் – அப்பா மாதிரி எழுதப் போறேன்

இந்த டைட்டிலை பார்த்த உடனேயே பதறிவிட்டீர்களா/?

ஸ்ருதி ஹாஸன் எழுதலாம். தப்பில்லை. ஆனால் அப்பா மாதிரி எழுதப் போறேன்னு சொல்றதுதான் கொஞ்சம் பதட்டமா இருக்கிறது என்கிறீர்களா.

கமல் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளில் ஆழமான அர்த்தம் இருக்கும், உணர்வுப்பூர்வமான உண்மைகள் இருக்கும். ஆனால் அது சட்டென்று பலருக்குப் புரியாது. சிலருக்கு அது என்னவென்றே தெரியாது.

ஆனால் ஸ்ருதி ஹாஸன் அப்படி எழுதப் போவது இல்லையாம்.

‘நான் ஒரு நல்ல கதை சொல்லி. கதை சொல்றது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால்தான் ரொம்ப நாட்களாகவே எழுத ஆரம்பிக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன்.

சினிமாவுக்கு கதை எழுதணும்னு ஆசை.. மக்களோட கனெக்ட் ஆகிற மாதிரியான கதைகளை எழுதறதுதான் என்னோட கனவு. இந்த புதுப் பயணத்திற்கான வேலைகளை ஆரம்பிச்சிருக்கேன்’ என்கிறார் ஷ்ருதி ஹாஸன்.

எழுத்தில் கவனம் செலுத்தினாலும், தொடர்ந்து நடிப்பது, பாடுவது எல்லாமே தொடரும். சினிமாவும், இசையும் என்னோடு எப்போவோ கலந்து விட்டன. அதனால் பாடுவேன், நடிப்பேன் அப்புறம் எழுதுவேன் என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார் ஷ்ருதி ஹாஸன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...