No menu items!

இளையராஜாவின் நாலாயிர திவ்ய பிரபந்தம்

இளையராஜாவின் நாலாயிர திவ்ய பிரபந்தம்

இளையராஜா நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை இசை வடிவில் உருவாக்கியிருக்கிறார்.. இதன் வெள்யீட்டு விழா தி நகர் கிருஷ்ணகான சபாவில் நடந்தது. மேடையை பாற்கடலில் பரந்தாமன் பள்ளிக்கொண்டிருப்பதை போல பிரமாண்ட சிலையை உருவாக்கியிருந்தார்கள்.  

பார்க்க பரவசத்தை ஏற்படுத்தியது.  ராமனுஜ மடத்தை சேர்ந்த ஜீயர்கள் புடை சூழ சரியாக 7 மணிக்கு சபைக்குள் இளையராஜா நுழைந்தார். அரங்கம் எழுந்து நின்று கரகோசம் செய்தது. சின்னப் புன்னகை  உதிர்த்து அமர்ந்தார் இசைஞானி.

வரிசையாக வந்திருந்த ஜீயர்களில் ஒருவர் கமர்சியலாக பேசி கைதட்டல் வாங்கினார். வேத பாடசாலையில் வேதங்கங்களை சொல்லிக்கொடுக்கும் போது குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் என்ரு நான் சொல்லும்போதே  என் மகன் இந்த பாடல் தெரியுமே என்றான் எப்படி தெரியும் என்றேன் இது தளபதி படத்தில் வரும் இளையராஜா பாட்டு என்றான். எப்போதுமே  இயல் வடிவில் இருந்தால் மறைந்து விடும். இசை வடிவில் இருந்தால் அடுத்த தலைமுறை வரைக்கும் படிக்கும்

அதனால்தான்  நாலாயிர பாசுரங்களை எழுதி வைத்ததோடு இல்லாமல் இளையராஜா அதற்கு இசை வடிவம் கொடுத்தால் அது  இன்னும் எளிமையாக எல்லோரும் பாடுவார்கள். அதைத்தான் அந்த நாளில் நாதமுனிகளும் விரும்பினார். இத்தனை ஆண்டுகள் கழித்து அது இசைஞானியால் நடந்திருக்கிறது.  இதைத்தான் பாட்டாலே புத்தி சொன்னார். பாடாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுபட்டேன் பாட்டுக்கள் பலவிதம்தான் என்று இசைஞானியே பாடியிருக்கிறார் என்று  பேசிய  அவர்  இறுதியாக  இதயக்கோவில்  படப் பாடலோடு  முடித்தபோது அவர் பேச்சு பலரையும் கவர்ந்தது.

அடுத்த பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்  பேசியது,  இவர் வைணவ இலகியத்தில் நுட்பங்களையும் அதில் கண்ணன் எப்படியெல்லாம் தன் அவதாரத்தில் ஒவவொரு கட்டத்திலும் திருவிளையாடல்களை  செய்தான் என்பதை  வருணனையாக சொன்னது அவையை மயங்க வைத்தது.

இதில் எட்டு பாடல்களைத்தேர்ந்தெடுத்து இசை வடிவம் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இது பற்றி அவர் பேசும்போது, திருவாசகத்திற்கு இசையமைத்த போதே பலரும் நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கும் இசையமைக்க வேண்டும் என்று என்னிடம் வேண்டிக்கொண்டார்கள். அது எப்போது நடக்க வேண்டுமோ அப்படி இப்போது நடந்திருக்கிறது. சாப்பாடு தயாராகாமல் டைனிங் டேபிளுக்கு வராது. ஜீயர் சுவாமிகள் இந்த இசைவெளியீட்டிற்கு வந்திருக்கிறார். சமத்துவத்தைக் குறிப்பிடும் அடையாளமாக இருக்கும் ராமனுஜரின்  சிலை இருக்கும் இடத்திற்கு நான் போயிருந்தேன் அங்கு போன்போது நான் சொன்னது, 108 திவ்ய தேசம் போல இது 109 வது திவ்ய தேசமாக இருக்கும் என்றேன். அங்கிருந்து ஜீயர் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வழக்கமான சினிமா விழாக்கள் போல் இல்லாமல்  சிறப்பாக இருந்தது. என்றார் இளையராஜா.  

எட்டு பாடல்களில் சில பாடல்களுக்கு  தெய்வ வேடம் அணிந்து பெண்கள் நடனம் ஆடினார்கள்.  இந்த பாசுரங்களுக்கு இசை குறிப்பு எழுதும்  பணிகளுக்கு  பல மாதங்கள் எடுத்துக் கொண்டார் இளையராஜா. தனது திரைப்பட பணிகளுக்கிடையே இதை செய்து முடித்திருப்பது  அங்கு வந்திருந்த ஜீயர்களுக்கு வியப்பை கொடுத்தது. இனி வைணவ திருக்கோவில்களில் இளையராஜாவின் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் ஒலிக்கும்.

ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இசையமைத்ததன் மூலம் இன்னிசையாழ்வார் என்று இளையராஜாவை  அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...