No menu items!

ப்ரியா மணி டைவர்ஸ்?

ப்ரியா மணி டைவர்ஸ்?

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ப்ரியா மணி பட வாய்ப்புகள் இல்லாததால் புத்திசாலிதனமாக திருமணமாகி செட்டிலாகிவிட்டார்.

திருமணமாகி சில மாதங்கள் அமைதியாக இருந்தவர் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சினிமாவுக்குள் வந்துவிட்டார். திருமணமானதால் வழக்கம் போல தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஷாரூக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டார். சட்டென்று தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தன. இதனால் தெலுங்கு சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என அங்கேயே செட்டிலாகி விட்டார்.

இப்படி ப்ரியா மணி ரீ-எண்ட்ரி ஆன சில வருடங்களிலேயே குடும்ப வாழ்க்கையில் சிக்கல் என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.

ப்ரியா மணியும் அவரது கணவர் முஸ்தபார் ராஜூம் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை.

ஒரு பக்கம் ப்ரியா மணி நடிப்பது கணவருக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள்.
மறுபக்கம் முஸ்தபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியும் இருக்கிறார், அந்த திருமணத்தில் இன்னும் சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன. அதை முடிக்காமல் முஸ்தபாவுக்கு நிம்மதி கிடையாது என்றும் சொல்கிறார்கள்.

இப்படியொரு பேச்சு ஓடிக்கொண்டிருக்க, தனது கணவருடன் ஒரு சினிமா பார்ட்டியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ப்ரியா மணி.
இந்த வீடியோ சமாளிப்பா அல்லது உண்மையா என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.

டைரக்டராகும் கார்த்தி, ஹீரோ யார்?

இன்றைய நிலவரப்படி கார்த்தி கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் வரிசையில் கெட்டியாக ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்.

ஆனாலும் கார்த்தியின் ஆத்மார்த்தமான ஆசை கோலிவுட்டில் ஒரு பரபரப்பான இயக்குநர் ஆவது. இதனால்தான் அவர் ‘ஆயுத எழுத்து’ படத்தின் போது மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமாவிற்குள் நுழைந்தார்.

காலம் யாரை விட்டது. கேமராவிற்கு பின்னால் நின்றபடி நட்சத்திரங்களை ஆட்டுவிக்க ஆசைப்பட்டவர் இன்று கேமராவிற்கு முன் நடிப்பில் ரகளைப் பண்ணிகொண்டிருக்கிறார்.

ஆனாலும் தனது இயக்குநர் ஆசையை கார்த்தி கைவிடுவதாக இல்லையாம். சீக்கிரமே ஒரு படத்தை இயக்கவேண்டுமென திட்டமிட்டு வருகிறார். இதற்காக கதை, திரைக்கதை டிங்கரிங் வேலைகளை எல்லாம் ஏறக்குறைய முடித்துவிட்டார். இது ஒரு பயோபிக் ஆகவும் இருக்குமாம். டைட்டில் மட்டும்தான் பாக்கி என்கிறார் கார்த்தி.

ஹீரோ யார் என்ற கேள்விக்கு ‘என் அண்ணன்தான்’ என்று கார்த்தியிடமிருந்து பட்டென்று பதில் வருகிறது. டைட்டில் மட்டும்தானே பிரச்சினை. ’சிவகுமாரும் மகன்களும்’ அல்லது ‘எஸ்.கே & சன்ஸ்’ என்று பெயர் வையுங்கள் கார்த்தி.

ஆக அண்ணி தயாரிக்க, அண்ணன் நடிக்க, தம்பி இயக்குவதற்கு பெயர்தான் ‘ஃபேமிலி சினிமா’.

பூர்ணாவுக்கு டும் டும் டும்.

தமிழில் ‘சின்ன அஸின்’ என்று விஜய் பாராட்டிய பூர்ணாவுக்கு கேரளாவில் இருக்கும் கன்னூரில் ‘நிக்காஹ்’ நடந்து முடிந்திருக்கிறது. திருமணம் தொடர்பான சடங்குகள் இம்மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதம் நடக்க இருக்கின்றன.

கணவர் பெயர் ஷனித் ஆசிப் அலி. துபாயில் இருக்கும் ஜேபிஎஸ் க்ரூப் கம்பெனியின் சி.இ.ஒ.

பூர்ணாவுக்கு துபாயின் கோல்டன் விசா கொடுக்க ஒப்புதல் ஆகியிருக்கிறது. ஆனால் ஷூட்டிங் இருந்ததால் பூர்ணா அதைப் பெற துபாய்க்கு செல்ல முடியவில்லை. பல முறை கோல்டன் விசா வாங்குவது தள்ளிப் போக, இது தொடர்பாக பல முறை பூர்ணாவுடன் ஷனித் பேசியிருக்கிறார்.

பிறகு துபாயில் நடந்த ஒரு விழாவில் பூர்ணாவும் ஷனீத்தும் சந்தித்து கொள்ள அங்கே காதல் அவர்களை ஆக்ரமித்து கொண்டிருக்கிறது.

பூர்ணாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். இதில் பூர்ணாதான் கடைக்குட்டி. இந்த நான்கு பேருக்கும் திருமணம் முடிந்துவிட பூர்ணா மட்டும் சினிமா சின்மா என்று காலம் தள்ளிக்கொண்டிருந்தார்.

நிக்காஹ் செய்ய அவரது குடும்பம் நெருக்கடி கொடுக்க, ஒரு பட்டியலாக நீளுமளவிற்கு கண்டிஷன்களை போட்டிருக்கிறார் பூர்ணா. ஆனால் ஷனித் விஷயம் பூர்ணாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர, ஷனித் ஓகேவா என்று கேட்டிருக்கிறார்கள். தான் போட்ட கண்டிஷன்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு பச்சைக் கொடி காட்டிவிட்டார் பூர்ணா.

இதனால் நாலைந்து வருடமாக நடந்த மாப்பிள்ளை தேடல் முடிவுக்கு வந்துவிட்டது.

நிக்காஹ் முடிந்த கையோடு நயன்தாரா பாணியில் ஷூட்டிங்கிற்கு கிளம்பியிருக்கிறார் பூர்ணா. கமிட் செய்த படங்களை முடித்து விட்டு ஒரு ப்ரேக் என்று கண்சிமிட்டுகிறார் இந்த சின்ன அசின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...