No menu items!

பிரசாந்த் கிஷோர் – கரன் தாப்பர் மோதல்! வைரல் வீடியோ பின்னணி

பிரசாந்த் கிஷோர் – கரன் தாப்பர் மோதல்! வைரல் வீடியோ பின்னணி

பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த வீடியோ பேட்டி வைரலாகியுள்ளது.

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், ‘மோடி தலைமையிலான பாஜக திரும்பி வருவதாகத் தெரிகிறது. கடந்த 5 மாதங்களாக அதுதான் நிலவரம். அது அப்படியே திடீரென மாற்றம் அடையாது. மோடிதான் திரும்ப வரப்போகிறார். கடந்த தேர்தலின் அதே எண்ணிக்கையை அவர்கள் பெறலாம் அல்லது அதைவிட சற்று சிறப்பாக செயல்படலாம். இதுதான் முடிவாக இருக்க போகிறது. நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர் மோடி மீதும் கோபம் இருந்தால் ஆட்சி இருக்கும். ஆனால், அந்த சூழ்நிலை இப்போது இல்லை. மோடிக்கு எதிராக மக்களிடம் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்பதைப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. சில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யலாம். ஆனால், மோடிக்கு எதிரான அலை இல்லை. இதுவரை, மோடிஜி மீது மக்களிடையே பரவலான கோபம் இருப்பதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் முன்பை விட கூடுதல் இடங்களை கூட பெற்று அவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன’ என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோரை மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எடுத்துள்ள பேட்டியில் இது தொடர்பாக சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், “தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினீர்கள், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வேரோடு அறுக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால், இரண்டிலும் காங்கிரஸ் வென்றது. இப்போது பாஜக வெல்லும்… மோடி வெல்ல வாய்ப்புள்ளது என்று எப்படி சொல்கிறீர்கள்” என்று கரண் தப்பார் கேட்டுள்ளார்.

இதற்கு கோபம் அடைந்த பிரசாந்த் கிஷோர் கடுப்பாகி, “உங்களிடம் ஆதாரம் இருக்கா… வீடியோ இருக்கா” என்று கேட்க, பிரசாந்த் கிஷோர் பேசிய பேட்டிகளை தேதி வாரியாக கரண் தாப்பர் குறிப்பிட்டு அதை காண்பித்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக மூத்த நிர்வாகிகளும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...