No menu items!

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? – ஓபிஎஸ் கேள்வி

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? – ஓபிஎஸ் கேள்வி

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சிலர் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. எனவே அதை பற்றி கருத்து சொல்ல விருப்பம் இல்லை. ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? என்று நாட்டு மக்களுக்கு தெரியும். தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும். பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள்.

அ.தி.மு.க. உறுதியாக இணைய வேண்டும் என்பதே என் நோக்கம். தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

28ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்

மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதில், இதற்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் நூறு ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை 10 மடங்காக உயர்த்தி 1000 ரூபாய் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டால் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்பட உள்ளது.

மல்லிகார்ஜூன கார்கே 26-ந்தேதி பதவியேற்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, 26-ம் தேதி பதவியேற்கிறார்.

முன்னதாக நேற்று டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சசிதரூர் ஆகியோர் நேரில் சென்று கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தீபாவளிக்காக அரசு பேருந்துகளில் 1.5 லட்சம் பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் பயணிக்க வசதியாக முன்பதிவு செய்யும் நடைமுறைகள் கடந்த செப்டம்பர் 21-ம் தேதியன்று தொடங்கியது.

இந்நிலையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 111 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 61 ஆயிரத்து 949 பேரும், மற்ற ஊர்களில் இருந்து பயணிக்க 89 ஆயிரத்து 168 பேரும் முன்பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை – அன்புமணி ராமதாஸ் கருத்து

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேர்த்தியாக இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால் சட்டமன்றத்தில் இந்த அறிக்கை எடுபடுமா என்பது கேள்வி. ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை.

அதே சமயம் தூத்துக்குடி துப்பாக்க்சிச் சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாடமாக வைத்து காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் காவல்துறை இதை ஒரு படிப்பினையாக ஏற்று இனிவரும் காலங்கள் இவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.

நிரவ் மோடியின் ரூ.500 கோடி சொத்துகளை கைப்பற்ற கோர்ட் அனுமதி

நிரவ் மோடியின் ரூ. 500 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நிரவ் மோடியின் 39 சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த 39 சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...