No menu items!

செந்தில் பாலாஜி – திமுகவின் புதிய தலைவலி!

செந்தில் பாலாஜி – திமுகவின் புதிய தலைவலி!

அ.தி.மு.க ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி.பலருக்கும் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜியும் அவரைச் சார்ந்தவர்களும் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அது பின்னர் வழக்காகவும் மாறியது. இப்போது அது அவருக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

அப்போது செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தார். பொதுக் கூட்டங்களில் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

2015 ஜூலை 27 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் செந்தில் பாலாஜியை நீக்கினார் ஜெயலலிதா. அதிமுகவில் நடந்த உள்கட்சி தேர்தலில், தனக்கு வேண்டியவர் களை நியமிக்க செந்தில்பாலாஜி முயற்சித்ததாக அவர் மீது அப்போது புகார் கூறப்பட்டது. அது மட்டுமில்லாமல், போக்குவரத்துக் கழ கங்களில் நேரடி நியமனம் தொடர் பாக பல்வேறு புகார்களும் அவர் மீது இருப்பதால் இந்த நடவடிக்கை என்று அப்போது கூறப்பட்டது.

2016 தேர்தலில் அரவக்குறிச்சியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அந்த வருடம் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்தார். அதிமுகவில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. தினகரன் அணிக்கு மாறினார் செந்தில் பாலாஜி. அங்கிருந்து 2018ல் திமுகவுக்கு வந்தார். 2019 இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதனைத் தொடர்ந்து 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றிப் பெற்றார். அவருக்கு திமுக அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இப்போது அவரது வெற்றிகளும் சாமர்த்திய நகர்வுகளும் வீணாகப் போகுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியால் வேலை வரும் என்று எதிர்பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதி மன்றத்தை அணுகினர். 2018ல் புகார் அளிக்கப்பட்டது. புகாரில் செந்தில் பாலாஜியின் பெயரும் சேர்க்கப்பட்டது. இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதற்கிடையே புகார் கொடுத்தவர்களிடம் சமரசம் பேசியிருக்கிறார்கள் செந்தில்பாலாஜி தரப்பினர். அதனால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரனையை நிறுத்தக் கோரி செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். உயர் நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

ஆனால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, இப்போது வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

திமுகவில் இப்போது மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறார் செந்தில்பாலாஜி. கடந்த உள்ளாட்சி தேர்தல் கொங்கு மண்டலத்தின் பொறுப்பை ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்கு வழங்கினார். பலன் கொங்கு மண்டலத்தை வலை வீசி அப்படியே திமுகவின் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் செந்தில் பாலாஜி. கோவையில் முன்னால் அமைச்சர் வேலுமணி குடியிருக்கும் அந்த வார்டை கூட தி.மு.க விட்டு வைக்க வில்லை. காரணம் செந்தில் பாலாஜியின் களப்பணி. அ.தி.மு.க கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தை தி.மு.க கோட்டையாக மாற்றினார். இதனால் முதல்வரிடம் நன்மதிப்பு பெற்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸை அமோக வெற்றி பெற வைத்தார் செந்தில். இதற்கு தேர்தல் நடைபெறும் சில நாட்களுக்கு முன்புதான் எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னால் அமைச்சர்கள் உற்சாகமாக களம் இறங்கியும் அதிமுக படு தோல்வி அடைந்தது. அனைத்திற்கும் காரணம் செந்தில் பாலாஜி தான். பலன் ஸ்டாலினின் நம்பிக்கை மிக்க தளபதியாகி விட்டார்.

இப்படி எல்லாம் செந்தில் பாலாஜிக்கு சுமூகமாக் போய்க் கொண்டிருந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெரிய தடையாக வந்திருக்கிறது. பா.ஜ.கவின் கடைக் கண் பார்வையில் இருக்கும் அமலாக்கத் துறை எந்த நேரத்திலும் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு அழைக்கலாம். விசாரணையில் தெளிவுகள் கிடைக்காவிட்டால் கைது செய்து விசாரிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழல்கள் உருவாகினால் திமுக ஆட்சிக்கு கெட்டப் பெயர் வரும். இதைதான் திமுகவின் மூத்தவர்கள் முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள். முதல்வரும் என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறார்.

திமுக தலைமையின் செல்லப்பிள்ளையாக இருந்த செந்திப் பாலாஜி இப்போது தலைவலியாக மாறியிருக்கிறார்.

திமுகவின் இந்த சிக்கல் பாஜகவுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. செந்தில் பாலாஜி மூலம் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க இந்த வழக்கு வசதியாக மாறிவிட்டது.

பல பிரச்சினைகளை சமார்த்தியமாக எதிர் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...