விமான தளங்களில் 2 விமானங்கள் ரெடியா இருக்காம். விமான நிலையத்துக்கு போற பாதையையும் பாதுகாப்பா வச்சிக்கிறதான நடவடிக்கைகளையும் எடுத்துக்கிட்டு இருக்காங்க. தமிழ்ர்களை நாட்டை விட்டு துரத்த முயற்சித்தவங்க நாட்டை விட்டு ஓட வேண்டிய சூழல் அங்க உருவாகியிருக்கு”
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனின் பெயரும் அடிபடுகிறது. அவரை ஜனாதிபதி ஆக்கினால் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது.
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.
அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.