No menu items!

இலியானாவின் கணவர் இவர்தான்!

இலியானாவின் கணவர் இவர்தான்!

இந்த உலகத்திற்கு மிக அத்தியாவசியமான முக்கிய செய்தி, ஆக்ஸ்ட் ஒன்றாம் தேதி இடையழகி இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

தனது செல்ல மகனுக்கு கோவா பீனிக்ஸ் டோலன் [Koa Phoenix Dolan] என்று பெயரிட்டு இருக்கிறார்.

இதுவரையில் தனது குழந்தையை சுமக்கும் புகைப்படங்களை மட்டும் சமூக ஊடகங்களில் பதிவிட்ட இலியானா குழந்தை பிறக்கும் வரை குழந்தையின் அப்பா யார் என்கிற விவரத்தை வெளியிடவே இல்லை.

ஒன்பதாவது மாதம் இருக்கும் போது, யாரென்று யூகிக்க முடியாதவகையில் இருந்த தனது காதலரின் புகைப்படமொன்றை மட்டும் சமூக ஊடகத்தில் வெளியிட்டார் இலியானா.

மே மாதம் 13-ம் தேதி இலியானா மைக்கேல் டோலனை திருமணம் செய்து கொண்டதாக இப்போது கூறுகிறார்கள். அதாவது தனது கர்ப்பம் குறித்து இலியானா தகவலை வெளியிடுவதற்கு 4 வாரங்களுக்கு முன்புதான் மைக்கேலை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.


ஷாக் கொடுத்த ஷங்கர்!!

சினிமாவிற்குள் நுழைந்து ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்குள் நேரடி தெலுங்குப்படம் எடுக்க அடியெடுத்து வைத்திருக்கிறார் ஷங்கர்.

’ஆர்.ஆர்.ஆர்.’ படப்புகழ் ராம்சரண் மற்றும் பாலிவுட்டின் கியாரா அத்வானியை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

‘இந்தியன் -2’ ஷூட்டிங் முடிந்துவிட்டதால் இப்பொழுது ‘கேக் சேஞ்சர்’ பட ஷூட்டிங்கில் ஷங்கர் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து 20 நாட்கள் இப்பட த்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இதில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி இருவரும் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை ஷுட் செய்ய இருக்கிறார்கள்.

கிராமத்து கதாபாத்திரம் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி என ராம்சரணுக்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களாம்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டும் சுமார் 90 கோடி ஷூட் செய்து இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன். பாடல்கள் மட்டும் சண்டைக்காட்சிகளுக்கு 90 கோடிகளா என தெலுங்கு சினிமா ஷாக் ஆகியிருக்கிறது.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், லேட்டஸ்ட் கேமரா என பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் இந்திய சினிமாவில் ஒரு புது ட்ரெண்ட்டை உருவாக்கும் என்கிறது ’’கேம் சேஞ்சர் தயாரிப்பு வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...