‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.