No menu items!

தோனி கால் இவர் கையில்!

தோனி கால் இவர் கையில்!

“ஓய்வைப் பற்றி முடிவெடுக்க இன்னும் 9 மாதங்கள் உள்ளன. என் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் ஐபிஎல் போட்டியில் ஆட விரும்புகிறேன். அதுதான் அவர்களுக்கு என்னால் அளிக்க முடிந்த பரிசு” என்று ஐபிஎல் கோப்பையை வென்றதும் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவிடம் தெரிவித்தார் தோனி.

சொல்வது மட்டுமல்ல… அதற்கான செயலிலும் இறங்கிவிட்டார். மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அவரது முட்டியில் அறுவைச் சிகிச்சை நடந்திருக்கிறது. அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்திருப்பவர் தீன்ஷா பர்திவாலா என்ற மருத்துவர். மூட்டு அறுவைச் சிகிச்சையில் 22 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவரை நம்பித்தான் அடுத்த ஐபிஎல் போட்டித் தொடரில் ஆடுவேன் என்று சொல்லியிருக்கிறார் தோனி.

யார் இந்த தீன்ஷா பர்திவாலா?

இந்தியாவின் தலைசிறந்த மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர்தான் தீன்ஷா பர்திவாலா. சில மாதங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும் அப்போது கால் முட்டியில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக ஜார்க்கண்டில் இருந்து விமானம் மூலம் மும்பை மருத்துவமனைக்கு இவரிடம்தான் கொண்டுவந்தார்கள். இப்போது முதல்கட்ட சிகிச்சைகள் முடிந்து ஊன்றுகோல் இல்லாமல் நடக்கும் அளவுக்கு தேறியிருக்கிறார் ரிஷப் பந்த். அவரது சிகிச்சையால் அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடும் அளவுக்கு ரிஷப் பந்த் தேறிவிடுவார் என்று கூறப்படுகிரது.

ரிஷப் பந்த் மட்டுமல்ல… சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜஸ்பிரித் பும்ரா போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கும் இவர்தான் ஆர்த்தோ டாக்டர். கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பாட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் என்று இந்தியாவின் பல முன்னணி விளையாட்டு வீரர்களும் இவரிடம்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பேனலில் இடம்பெற்றுள்ள இவர், சிறந்த டாக்டருக்கான ISAKOS John Joyce விருதை வென்றவர். விளையாட்டு மருத்துவம் தொடர்பான அமெரிக்காவின் முக்கிய ஜர்னலின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருக்கிறார்.

இந்த அளவுக்கு புகழ்பெற்ற தீன்ஷா பர்திவாலாவின் கன்சல்டிங் பீஸ் 2,500 ரூபாய். கால் மூட்டு அறுவைச் சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார். இவர் இருக்கும் நம்பிக்கையில்தான் அடுத்த ஐபிஎல் தொடரில் ஆடுவேன் என்ரு நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார் தோனி.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் தோனி 3 மாதம் ஓய்வெடுக்க வேண்டும். அதன்பின் அவர் மீண்டும் பயிற்சி பெற்று அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குள் முழுவதுமாக தயாராகிவிட முடியும் என்பது டாக்டர் தீன்ஷாவின் நம்பிக்கை.

நமக்கும் அதுதான் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...