No menu items!

மீரா ஜாஸ்மினின் திடீர் மாற்றம்

மீரா ஜாஸ்மினின் திடீர் மாற்றம்

மாதவனுக்கு ஜோடியாக ‘ரன்’ படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மினை நினைவிருக்கலாம். தனது இடையைக் கூட காட்டாமல், கவர்ச்சி என்றால் எனக்கு அலர்ஜி என்கிற ரீதியில் நடித்தவரின் ரீ எண்ட்ரிதான் இப்போதைய ஹாட் டாபிக்.

திருமணமாகி துபாய்க்கு போனவர் செய்த முதல் காரியம் நீண்ட வருடங்களாக தான் பயன்படுத்தி வந்த மொபைல் ஃபோன் எண்ணை மாற்றியதுதான். ஒட்டுமொத்த மலையாளம் மற்றும் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி மட்டுமின்றி பத்திரிகையாளர்களால் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்து வந்தார்.

திருமணத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட, அப்போது மீரா ஜாஸ்மின் யூ டர்ன் அடித்தது மலையாள சினிமாவிற்குதான். ஜெயராமுடன் ஜோடியாக சட்டென்று வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம்தான் பாக்ஸ் ஆபிஸில் பதுங்கிவிட்டது.

இதனால் மீரா ஜாஸ்மின் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சினிமா ஷூட்டிங் இல்லையென்றால் என்ன.. இன்ஸ்டாக்ராமில் படங்களை ஏற்றுவதற்காக போட்டோ ஷூட்டில் மிக பிஸியாக இருக்கிறார். இதில் முக்கியமான சமாச்சாரம் என்னவென்றால், மீரா ஆடைகளை குறைத்து தாராளமயமாக்கும் கொள்கையுடன் களமிறங்கி இருப்பதுதான்.

’பிஸியாக நடித்த காலத்தில் கவர்ச்சியாக நடிக்க முன்வரவில்லை. இடை தெரிய கூடாது, முட்டிக்கு மேல் டிரெஸ் போட மாட்டேன் என பல கண்டிஷன்களுடன் தான் கமிட்டாவார். படங்கள் வர ஆரம்பித்த போது காதல், லிவ்விங் டு கெதர் என ஒதுங்கினார். அடுத்து திருமணமாகி துபாய்க்கு போனார்.

இப்படி எல்லா வாய்ப்புகளையும் ஒதுக்கியவர், இப்போது காலம் கடந்து கவர்ச்சி காட்டுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. சரி அவரை தொடர்பு கொள்ளலாம் என்றால் ஒரு மேனேஜரும் இல்லை. அவராக நினைத்தால்தான் பேசுவார். இல்லையென்றால் இன்ஸ்டாக்ராமில் மட்டும்தான் அவரை பார்க்க முடியும்’ என்று மலையாள, தமிழ் இண்டஸ்ட்ரியில் மீரா புராணம் பாடுகிறார்கள்.

சின்மயிக்கு வந்த ஏடாகூடமான சிக்கல்

சின்மயி – ராகுல் ரவீந்திரன் ஜோடிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. உற்சாகமான சின்மயி தன்னுடைய குழந்தைகளின் கைகளைப் புகைப்படமெடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருந்தார்.

அடுத்த நாளே அவரது சமூக ஊடக கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
குழந்தைப் படம் போட்டால், இப்படியொரு நிலையா என்ற சந்தேகத்தில் விசாரித்தபோது, வேறொரு வில்லங்கம் இருப்பது தெரியவந்திருக்கிறது.

சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பிய #MeToo விவாகரத்திற்கு பிறகு சின்மயிக்கு எக்கசக்கமான ஏடாகூடமான மெஸேஜ்களை ஆளாளுக்கு தட்டிக்கொண்டு இருக்கிறார்களாம். நேரம் காலம் இல்லாமல், தங்களது அந்தரங்க பகுதிகளை படமெடுத்து சின்மயிக்கு பல ஆண்கள் அனுப்ப இது குறித்து சமூக ஊடகத்தின் நிர்வாகத்திற்கு புகார் அளித்திருக்கிறார் சின்மயி.

இதன் தொடர்ச்சியாகதான அவருக்கு தனிப்பட்ட முறையில் மெஸேஜ் அனுப்பும் வசதி தடை செய்யப்பட்டு இருக்கிறது.

‘யாரும் பயப்பட வேண்டாம். நானும் என் கணவரும் குழந்தைகளும் நலமாக இருக்கிறோம். வேறெந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இந்த மாதிரியான சிலபேர்களால் கொஞ்சம் மன உளைச்சல் இருந்தது உண்மைதான். இனி அப்படி நடக்காது என நம்புகிறேன்’’ என்று சமாதானம் சொல்லியிருக்கிறார் சின்மயி.

இந்தியாவின் டாப் – 3 காஸ்ட்லி இயக்குநர்கள்

இந்திய சினிமாவில் இன்று டாப் கியரில் வேகமெடுத்து கொண்டிருப்பது தென்னிந்திய இயக்குநர்கள்தான்.

முன்பு மணிரத்னம் மட்டுமே இந்திய அளவில் வரவேற்பைப் பெற்ற தென்னிந்திய இயக்குநராக இருந்தார். இவருக்கு அடுத்து பிரம்மாண்டத்தைக் காட்டிய ஷங்கர் பரபரப்பான இயக்குநராக வலம் வந்தார்.

ஆனால் ’பாகுபலி’ படங்கள் மூலம் பிரம்மாண்டத்தின் புதிய பரிமாணத்தை காட்டிய எஸ்.எஸ். ராஜமெளலி, மணிரத்னம், ஷங்கர் மட்டுமில்லாமல் ஹிந்தியின் ஜாம்பவான் இயக்குநர்களையும் ஓவர்டேக் செய்துவிட்டார்.

பிரம்மாண்டம், மேக்கிங், ஸ்கிரிப்ட் சமாச்சாரங்களில் மட்டுமில்லாமல் சம்பள விஷயத்திலும் எஸ்.எஸ். ராஜமெளலி, ஷங்கர் இந்திய அளவில் காஸ்ட்லியான டைரக்டர்களாக இருக்கிறார்கள்.

எஸ்.எஸ் ராஜமெளலி 100 கோடி சம்பளமாக வாங்குவதாக கிசுகிசு அடிப்படுகிறது. சம்பளம் மட்டுமின்றி தான் இயக்கும் படங்களின் வியாபாரத்திலும் பங்கு அல்லது சில விநியோக உரிமைகளைக் கேட்கிறாராம். இதனால் இவரது சம்பளம் 100+ கோடி என்று சொல்கிறார்கள்.

இவரை அடுத்து இருப்பது ஷங்கர். 50 கோடி வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த காஸ்ட்லி இயக்குநர்கள் பட்டியலில் சமீபத்திய வரவாக இணைந்திருப்பவர் புஷ்பா பட இயக்குநர் சுகுமார். 15 கோடி வாங்கி கொண்டிருந்த இவர் தற்போது 40 கோடி கேட்கிறாராம்.

பான் – இந்தியா என்ற கான்செப்ட் மற்றும் ஒடிடி வருகையால் தற்போது இயக்குநர்களுக்கு நட்சத்திரங்களை விட அதிக டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கிடைக்கும் வரை கல்லா கட்டுவதில் நட்சத்திரங்களுக்கு இணையாக இயக்குநர்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...