No menu items!

விடாத இருமலா? – மக்களை மிரட்டும் புதிய வைரஸ்

விடாத இருமலா? – மக்களை மிரட்டும் புதிய வைரஸ்

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக விடுபட முடியாமல் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதியதாக பரவும் மற்றொரு வைஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸின் பெயர் Influenza A H3N2. இந்த புதிய வகை வைரஸால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) எச்சரித்துள்ளது.

பன்றிக் காய்ச்சலின் ஒரு வகைதான் இந்த Influenza A H3N2. இந்த வைரஸ், விலங்குகள் வழியாக மனிதர்களைத் தாக்கி, பின்னர் மனிதர்கள் மூலம் சக மனிதர்களுக்கு தொடுதல், தும்மல், முத்தமிடுதல், சளி போன்றவற்றால் பரவி வருகிறது. 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தொண்டை வலி, விடாத வறட்டு இருமல், குமட்டல் மற்றும் வாந்தி, உடல்வலி, சோர்வு, தலைவலி ஆகியவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள். இந்த அறிகுறிகளுடன் சிலருக்கு மூச்சுத்திணறல் , மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி , , தலைசுற்றல், வலிப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் நடத்தியுள்ள ஆய்வுகளின்படி எதிர்ப்புசக்தி குன்றைவாக உள்ள குழந்தைகள், முதியோர் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்களை இந்த வைரஸ் தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. SARI எனப்படும் தீவிர சுவாசத் தொற்று பிரச்னை கொண்டவர்களில் 50 சதவீதம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல், 27 சதவீதம் பேருக்கு சுவாச கோளாறு அறிகுறி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவையும், 7 சதவீதம் பேருக்கு ICU சிகிச்சையும் தேவைப்படுகிறது.

பொதுவாக சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல் சுமார் 3 நாட்களில் குணமாகி விடும். ஆனால் இந்த வகை இன்புளூயன்ஸா வைரஸ் தாக்கினால், 7 நாட்கள் வரை பாதிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு காய்ச்சல் விட்டாலும் 3 வாரங்கள் வரை இருமல் நீடிக்கும்.

இந்த வைரஸ் தொற்று தாக்கினால் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்சினை. தொற்றின் பாதிப்புகளை குறைப்பதற்கு மட்டுமே மருந்துகள் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும். ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சரி இந்த இன்புளூயன்ஸா வைரஸ்தான் நம்மை தாக்கியது என்று எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு உடல் சோர்வுடன் காய்ச்சல், உடல்வலி, இருமல் தொண்டைவலி ஆகியவை இருக்கக்கூடும். ஒரு சிலருக்கு மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு ஆகியவையும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்த பாதிப்பில் இருந்து பாதுகாக்க செய்யகூடியவை, செய்யக்கூடாதவை என்ற பட்டியலை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைவரும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இருமல், தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும், கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது. உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மாத்திரை போட்டுக்கொள்ளாலாம்.

பிறருடன் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது. மற்றவர்களுடன் மிக நெருக்கமாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. மருத்துவர்கள் ஆலோசனை இன்றி ஆன்டியோட்டிக் போன்ற மற்ற மருத்துகளை உட்கொள்ள கூடாது என செய்யக்கூடாத விஷயங்களையும் ஐசி எம் ஆர் சொல்லியிருக்கிறது.

கொரோனாவையே சமாளிச்சுட்டோம்… இதைச் சமாளிக்க மாட்டோமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...