No menu items!

கமலைப் பற்றிய 6 லேட்டஸ்ட் விஷயங்கள்

கமலைப் பற்றிய 6 லேட்டஸ்ட் விஷயங்கள்

கமல், இன்றைக்கு தமிழ் சினிமாவில் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.

கைவசம் ஷங்கருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும், ‘இந்தியன் 2’, ‘இந்தியன்3’ என இரண்டுப்படங்கள், அடுத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னமுடன் இணையும் ‘தக் லைஃப்’, பிரபாஸூடன் நடிக்கும் ’கல்கி 2898 ஏடி’ என படங்கள் இருக்கின்றன.

இதில் ’இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ ஷூட்டிங் முடிவடைந்து விட்டன. இப்போது ’இந்தியன் 2’ பட போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப்பட வேலைகள் முடிவடைந்ததும், உடனடியாக ‘இந்தியன்3’ போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்துவிடுமாம்..

இந்த இரண்டுப் படங்களிலும் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்,, ப்ரியா பவானி ஷங்கர், சித்தார்த்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரம்மானந்தம், என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கிறது.

அடுத்து கமல், மணி ரத்னம் இணையும் ‘தக் லைஃப்’ படத்தின் ஷூட்டிங் செர்பியாவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. மணிரத்னம் அங்கே சென்று விட்டார். கமலால் திட்டமிட்ட நாளில் செர்பியாவுக்கு சென்று ஷுட்டிங்கில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாம்.. இதனால் ‘தக் லைஃப்’ ஷூட்டிங் ரத்தாகிவிட்டதாம்.

இதனால் தேவையில்லாத செலவு என தயாரிப்பு நிறுவனம் பக்கம் கொஞ்சம் பதட்டமாகிவிட்டதாம், ராஜ் கமல் இண்டர்நேஷனல் உடன் ரெட் ஜெயண்ட், மெட்ராஸ் டாக்கீஸூம் இணைந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மணிரத்னம் – கமல் கூட்டணி என்பதால், ஜெயம் ரவியும் ,த்ரிஷாவும் ‘தக் ஃலைப்பில்’ கமிட்டானார்கள். இந்நிலையில் திடீரென துல்கர் சல்மான் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டார்.

வேறொரு படத்திற்கான கால்ஷீட்டில் குழப்பம் உருவாகிற மாதிரி தெரிவதால், ’தக் லைஃப்’ படத்திலிருந்து விலகிக்கொள்கிறேன் என துல்கர் கிளம்பிவிட்டார். இப்போது கமல் படத்திலிருந்து ஜெயம் ரவியும் விலகிக் கொள்ள இருப்பதாக பேச்சு அடிப்படுகிறது. இவருக்கும் கால்ஷீட் பிரச்சினைதான் என்கிறார்கள்.

கமலின் கால்ஷீட் இப்போது தேர்தல் பரப்புரையைப் பொறுத்து மாறியிருப்பதால், சில குழப்பங்கள் எழுந்திருப்பதாகவும், இது அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை பாதிப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள்.

இந்த மூன்று படங்களைத் தவிர்த்து கமல், இப்போது பிரபாஸூடன் இணைந்து ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமல்தான் பிரபாஸூக்கு வில்லன் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் இப்போது கமல் அந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில்தான் நடிப்பதாக தெரியவந்திருக்கிறது, அதாவது ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் அமைந்ததைப் போலவே கமலின் கதாபாத்திரம் இருக்குமாம்.


லிப்-லாக் ஈஸி இல்ல – அனுபமா பரமேஸ்வரன்

’ப்ரேமம்’ மலையாளப் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் இப்போது தெலுங்கு சினிமா பக்கம்தான் ரவுண்ட் அடித்தப்படி இருக்கிறார்.

லிப் லாக் காட்சிகளுக்கும் ஒகே சொல்லியபடி ரவுசு காட்டும் அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது.

வாய்ப்புகள் வரும் தெலுங்கு சினிமாவிலாவது தனது மார்க்கெட்டை தக்க வைக்க விரும்பிய அனுபமா பரமேஸ்வரன் லிப்-லாக் காட்சிகளிலும் நடிக்க தயங்குவதே இல்லை.

இவரது நடிப்பில் வெளியான ‘தில்லு ஸ்கொயர்’ படத்தின் டீசரை பார்த்து அரண்டுப் போன ரசிகர்களுக்கு, அடுத்து வெளியாக இருக்கும் ‘ரவுடி பாய்ஸ்’ பட முத்தக்காட்சி அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிறதாம்.

ஆனால் அனுபமா பரமேஸ்வரனோ ஒரே மாதிரி நடிக்க விருப்பமில்லை. ஆனாலும் காதல் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயமில்லை என்று மனம்விட்டு பேசியிருக்கிறார்.

‘காதலை அப்படியே வெளிப்படுத்தி நடிக்கிறது அவ்வளவு சுலபம் இல்ல. ரெண்டு பேரு நெருக்கமாக இருப்பது என்பது அவர்கள் இருவருக்குமான தனிப்பட்ட தருணம்.

ஆனால் ஷூட்டிங்கின் போது, நெருக்கமாக நடிக்கும் போது உங்களை சுத்தி 100 பேர் இருப்பாங்க. அதிலும் நான் நடிச்ச கார் கிஸ் சீன், நடிக்கும் போது என் கால் படபடக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனால் நடிச்சுதான் ஆகணும். உங்களோட உணர்வுகள், உணர்ச்சிகளைக் காட்டி நடிக்கணும். அப்பதான் அந்த கதாபாத்திரம் நம்புற மாதிரி இருக்கும்.

காதல் காட்சியை எடுக்கும் போது சுத்தி இருக்கிறவங்களோ அல்லது அதை படமாக பார்க்கிறவங்களோ, அது ரொம்ப சுலபம் நினைக்கிறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி அது சுலபமில்ல.’’ என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...