ஆர். ஜே. பாலாஜி தம்பியிடம், ‘தனி ரூம் வேணும் தனி ரூம் வேணும்னு கேட்டீயே.. அப்பா அம்மா நடுவுல போய் படுத்தா என்ன’ என்று கேட்பது, சத்யராஜின் அம்மா, ‘அம்மாகிட்ட பேச 5 நிமிஷம் இல்ல. ஆனா இதுக்கு மட்டும் எப்படி டைம் கிடைச்சது’ என்று கேட்பது என காமெடி சரவெடி களைக் கட்டுகிறது.
நயன்தாரா திருமணமான கையோடு, ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ என்ற ஹிந்திப்படத்தில் நடிக்க இருப்பதால், இனி தமிழில் பூஜாதான் எல்லாமே என்று ஒரு பக்கம் பில்டப்புகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
”பிரயாக்ராஜ் ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்ட சம்பவத்தில் அரசின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. விதிகளை மீறி வீடு கட்டப்பட்டிருப்பதாக சனிக்கிழமை மாலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. ஞாயிறு முற்பகலில் விளக்கம் வரவில்லை என்று இடித்துத் தள்ளப்படுகிறது.
ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.