No menu items!

பாஜகவிடம் எச்சரிக்கையுடன் உள்ளோம்: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

பாஜகவிடம் எச்சரிக்கையுடன் உள்ளோம்: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை சந்தித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், “பாஜக வட மாநிலங்களில் எப்படிபட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது. பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சியை எப்படி பாஜக பிடித்தது என்பது எங்களுக்கும் தெரியும்… மக்களுக்கும் தெரியும்… உங்களுக்கும் தெரியும்… எனவே நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்துவிட்டது. பாஜக தனித்துதான் போட்டியிட்டது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். இதன் காரணமாக பாஜக எங்களுடன் பணியாற்ற விரும்பலாம். காத்திருந்து பாருங்கள். திமுகவைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம்” என்று கூறினார்.

எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

2023ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதானி விவகாரம்: பிப்ரவரி 6-ந் தேதி நாடு முழுவதும் போராட்டம்காங்கிரஸ் அறிவிப்பு

அதானி குழும நிறுவனங்கள் மீது மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களிலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பெரும் முதலீடுகளை செய்துள்ளது. கடன் மற்றும் பங்குகள் வகையில் ரூ.36,474 கோடியை எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது. மேலும் ஸ்டேட் வங்கி, அதானி குழுமத்துக்கு கடன் வழங்கியுள்ளது. ஆனால் சொத்துக்கள் அடிப்படையிலேயே கடன் வழங்கியுள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி மற்றும் ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. எதிர்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிறுவனம் முன்பும், கடன் வழங்கிய ஸ்டேட் வங்கி முன்பும் காங்கிரஸ் சார்பில் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) போராட்டம் நடக்கிறது என அறிவித்துள்ளது.

பரியேறும் பெருமாள்’ நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்

பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ். குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் தங்கராஜ் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...