No menu items!

கியாரா அத்வானி – விஜய்-67 ஹீரோயின்?

கியாரா அத்வானி – விஜய்-67 ஹீரோயின்?

விஜய்66 படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஜூலை மாதம் ‘புஷ்பா -2’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கக்கூடும் என்பதால் ராஷ்மிகா மந்தானா மற்றும் விஜய் சம்பந்தபட்ட காட்சிகளை மளமளவென எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்67 படம் பற்றி பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜயுடன் இணையும் படமென்பதால், இப்படத்திற்கு எதிர்பார்பு அதிகமிருக்கிறது. மேலும் விக்ரம் இந்திய சினிமாவில் பேசப்படும் படமாகவும் இருப்பதால், அடுத்த படத்தையும் அதேபோல் எடுத்து செல்ல வேண்டுமென லோகேஷ் கனகராஜ் தரப்பு தீவிர ஆலோசனைகளில் இருக்கிறதாம்.

விஜய்க்கு கதை ஓகே. ஆனால் யாரை ஜோடியாக நடிக்க வைப்பது என்ற கேள்விக்குதான் இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஹிந்தி நடிகைகளைப் பட்டியலிட்டு கொண்டிருக்கிறது லோகேஷின் உதவியாளர்கள் குழு.

இந்நிலையில் விஜய்67-ல் நடிக்கும் வாய்ப்பு ஹிந்தியிலும், தெலுங்கிலும் பரீட்ச்சயமான கியாரா அத்வானியை நடிக்க வைக்கலாமா என்று பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

பொதுவாகவே விஜய்க்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் மீது ஒரு ஈர்ப்பு  உண்டு. அவரது பாணியை இங்கே கொஞ்சம் தனது ஸ்டைலில் இறக்கி விடுவார். அந்தவகையில் ஏற்கனவே மகேஷ் – கியாரா அத்வானி நடித்த படமும் அங்கே சூப்பர் ஹிட் என்பதால், கியாரா அத்வானிக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

வாய்ப்புகளை வளைத்து போடும் அம்மா நடிகை

சமீப காலமாக கோலிவுட்டில் ஹீரோயின்களுக்கிடையே வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் பஞ்சாயத்து இல்லை. இதற்கு காரணம் ஒடிடி. படத்திற்கு வாங்கும் சம்பளத்தைவிட 10 முதல் 30 சதவீதம் கூடுதலாக சம்பளம் கொடுத்து ஹீரோயின்களை தங்களது வெப் சிரீஸ்களில் நடிக்க வைக்க ஒவ்வொரு ஒடிடி-யும் மும்முரமாக முண்டியடித்து கொண்டு வருகின்றன.

ஹீரோயின்கள் இந்த வகையில் ஏதாவது ஒடிடி-யில் பிஸியாக இருக்க, இப்போது வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கும் பஞ்சாயத்துகள் அம்மாவாக நடிக்கும் நடிகைகளிடையே தலைதூக்கி வருகிறதாம்.

ஏதாவது ஒரு படத்திற்கு அம்மா கதாபாத்திரத்திற்கு யாரையாவது கேட்டால், அது எப்படியாவது மற்ற அம்மா நடிகைகளுக்கும் தெரிந்துவிடுகிறது என்கிறார்கள். இந்த விஷயம் எப்படி லீக் ஆகிறது என்பது மட்டும் புரியவில்லை என்கிறது தயாரிப்பாளர்கள் வட்டாரம்.

வாய்ப்புகளைத் தட்டிப்பறிப்பதில் முன்னணியில் இருப்பது இரண்டெழுத்து நடிகைதானாம். முன்னாள் கண்ணழகி நாயகியின் இளைய உடன்பிறப்பு இவர். ’அந்தம்மா 30 கேட்டார்களாமே. நாம 15-க்கு ஓகே பண்ணிடலாம்’ என்று தடாலடி ஆடித்தள்ளுபடி மாதிரி சம்பளத்தைக் குறைத்து சூட்டோடு சூடாக கமிட்டாகி விடுகிறாராம்.

இதனால் இதுவரையில் கமர்ஷியல் ஹீரோக்களுக்கு அம்மாவாக வலம் வந்தவர் தற்போது குடும்பத்தில் பிஸியாக இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டார் என்கிறது கோலிவுட்  வட்டாரம். இவரைப் போல் வாய்ப்புகளை இழந்த அம்மா நடிகைகளின் பட்டியல், பலசரக்கு பட்டியலை விட கொஞ்சம் நீளம் என்கிறார் ஒரு அனுபவம் வாய்ந்த புரொடக்‌ஷன் மேனேஜர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...