No menu items!

விஜய் பின்னாடி மோடி!

விஜய் பின்னாடி மோடி!

’தமிழக வெற்றி கழகம்’

திராவிடம், தேசியம் என வாக்கு அரசியலுக்காக அதிகம் முணுமுணுக்கப்படும் இந்த இரண்டு சமாச்சாரங்களையும் அப்படியே ஓரங்கட்டிவிட்டு, தமிழகம் என்பதை தனது அரசியல் எண்ட்ரீக்காக கையிலெடுத்து இருக்கிறார் விஜய்.

‘நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று படங்களில் பஞ்ச் டயலாக் விட்டவர், இப்போது நிஜ வாழ்க்கையிலும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் அரசியலில் களம் காண தயாராகிவிட்டார்.

நீண்டகாலமாக ‘அண்ணன் நான் ரெடிதான் வரவா’ என்று தயங்கிக் கொண்டே அரசியலுக்குள் வராமல் இருந்த விஜய் எப்படி இந்த முடிவுக்கு வந்தார், பின்னணியில் நடந்தது என்ன?

விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஹுரோவாக இருந்த போதிலும், அரசியல் என்றால் விஜயைப் பொறுத்தவரை. அது ஒரு குழப்பம். அந்த குழப்பம் இப்போது கூட தொடர்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். காரணம் அவர் எதிர்க்க இருப்பது திமுக கட்சியையா அல்லது பாரதிய ஜனதா கட்சியையா என்ற குழப்பம் இருப்பதை அவரது அறிவிப்பு காட்டுகிறது என்று ஒரு பக்கம் இப்பொழுதே அவரை பற்றி ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்கள்.

ஆனால், விஜய் அரசியல் எண்ட்ரீக்கு முதல் விதையைப் போட்டவர் அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். இவரது ஆசையே விஜய்க்கு அரசியல் ஆர்வத்தைத் தூண்டியது.

விஜயின் அரசியல் ஆர்வம் ‘வேலாயுதம்’ படத்தின் போதுதான் முழுவீச்சில் அதிகரித்து என்று சொல்லலாம். ஒரு பக்கம் இரும்புப் பெண்மணி, மறுபக்கம் அரசியல் சாணக்கியர் என்ற இருபெரும் தலைவர்கள் இருந்ததால், நாம் அரசியலில் இறங்கினால் என்ன ஆவோம் என்ற குழப்பம் விஜய்க்கு இருந்தது.

அதனாலேயே இந்த இரு தலைவர்களையும் பற்றி விஜய் அதிகம் கமெண்ட் அடித்தது இல்லை.

ஆனால் ’காவலன்’ படம் வெளியான போது விஜய்க்கும், உதயநிதிக்கும் இடையே மனக்கசப்பு உருவானது. அந்த நேரத்தில், விஜய் உதயநிதியைப் பற்றி தனது மனக்குமுறலை வெளியிட யோசித்ததாகவும், பின்னர் அதை கைவிட்டதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

ஆக, அரசியலில் இறங்குவதற்கு முன்பாகவே விஜய்க்கு அரசியலில் போட்டி அப்பொழுதே உருவாகிவிட்டது.

அது இன்றுவரையும் தொடர்கிறது. இதனால்தான் 2026- சட்டமன்றத் தேர்தலுக்காக களமிறங்க இருப்பதாகவும், இப்பொழுது தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகாவும் விஜய் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

’வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.’ என விஜயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூர்ந்து கவனித்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டிருந்தால், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட தன்னுடைய அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை விஜய் வெளியிட்டு இருக்கலாம்.

ஆனால் இப்பொழுது மிக அவசரமாக வெளியிட என்ன காரணம் என்றால், விஜயின் இலக்கு திமுக. தமிழ்நாட்டில் மட்டும் தனது அரசியலை முன்னெடுக்க முதலில் திமுக கட்சியை வீழ்த்த வேண்டும்.

அதற்கு சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் கட்சியை நிர்வாகிகள் மூலம் பலப்படுத்திவிடலாம்.

ஆனால் திமுகவின் பலத்தை, எப்படி சாய்ப்பது? இதற்கு இங்கே 40 பாராளுமன்றத் தொகுதிகளை ஜெயிக்க திட்டமிடும் திமுகவை, தனது அரசியல் எண்ட்ரீயை வைத்தே பதம்பார்த்துவிடலாம்.

பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு போகும் வாக்குகளைப் பிரித்துவிட்டாலே போதும். திமுக ஆட்சிக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி விடலாம். இது அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் இடைஞ்சலாக இருக்கும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறதாம்.

விஜயின் பின்னாடி மோடி இருக்கிறார் என்ற கிசுகிசு விஜயின் அறிக்கைக்குப் பிறகு கவனம் பெற்று இருக்கிறது.

இந்த அரசியல் கணக்குகள் ஒரு பக்கமிருக்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலுக்கு தன்னை தயார் படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் மும்முரம் காட்டிவருகிறார். அரசு தொடர்பான செயல்பாடுகள், தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்பாராத சூழல்களை எப்படி சமாளிப்பது, சட்டரீதியான நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள, ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து கொண்டே வருகிறார். அதேபோல் காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்.

பத்திரிகையாளர்கள் சென்னை பட்டினம்பாக்கத்திற்கு அருகே இருக்கும் தனது அலுவலகத்தில் சந்திப்பைதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் விஜய். இவர்கள் மூலமாக அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது போன்ற விஷயங்களில் பத்திரிகையாளர்களின் கருத்துகளையும் தெரிந்து கொண்டுவருகிறார் விஜய்.

இப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், பத்திரிகையாளர்கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில்தான் இப்போது அரசியலில் இறங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...