‘விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. கட்சி சீரமைப்பு பணியில தீவிரமா இருங்க. என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லி இருக்கார்.”
விஜய் சமீபத்தில் நடித்த ‘பீஸ்ட்’ படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 7.3 கோடி வசூல் செய்ததாக பேச்சு அடிபடிகிறது. இப்படத்தின் உரிமைகள் 9 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும், விஜய் என்ற பெயர் அங்கு உச்சரிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.
‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்குப் பதில் வேலராமமூர்த்தி நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பாத்திரத்துக்கு டாட்டா காட்டியுள்ளார்கள்.