No menu items!

தமிழுக்கு மீண்டும் வரும் பாவனா!

தமிழுக்கு மீண்டும் வரும் பாவனா!

தமிழில் அஜித் உட்பட பிரபல நடிகர்களுடன் நடித்த பாவனா, 2017-ல் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறைக்குப் பிறகு வெளியே எங்கும் அதிகம் தென்படாமலேயே இருந்து வந்தார்.

சினிமா மட்டுமில்லாமல் சமூக ஊடகங்களையும் முற்றிலும் தவிர்த்து வந்தார். சில கன்னடப் படங்களில் மட்டும் நடித்தவர், மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடிப்பதையும் தவிர்த்தே வந்தார்.

ஆனால் தற்போது மீண்டும் தனது பழைய இயல்பு வாழ்க்கையை சினிமாவில் தொடர முடிவு செய்திருக்கிறார். அதற்கேற்ற வகையில் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்கான யுக்தியாக தனது போர்ட்ஃபோலியோ புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் அதிகம் வெளியிட்டும் வருகிறார்.

‘கடந்த ஐந்தாண்டுகளாக என்னுடைய அடையாளத்தை சிதைத்துவிட்டார்கள். என்னை எல்லோரும் தனிமைப் படுத்திவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் என் குரலை நான் தொடர்ந்து எழுப்பிக்கொண்டேதான் இருந்து வந்திருக்கிறேன். தற்போது எனக்காக பலர் குரல் கொடுப்பதைப் பார்க்கும் போது, நான் ஒரு தனிப் பெண் இல்லை என்று புரிகிறது. உங்களுடைய ஆதரவுதான் என்னுடைய அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவியிருக்கிறது’ என்றார்.

இந்நிலையில் பாவனா சார்பாக திரைப்படங்களில் நடிப்பதற்கு விருப்பம் உள்ளதாக தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. முதலில் தன்னை அடையாளம் காட்டிய மலையாள சினிமாவில் நடிப்பது, அடுத்து தமிழ்ப் படங்களிலும் மீண்டும் வலம் வருவது என திட்டமிட்டு இருக்கிறாராம். ‘பாவனா நடிக்க விரும்புறாங்க. கமிட் பண்ணலாமா’ என பாவனா தரப்பு பி.ஆர். வேலைகளை ஆரம்பித்துவிட்டார்களாம்.

பட வாய்ப்புகளைக் கவர பரபரக்கும் கீர்த்தி ஷெட்டி!

பாலா சூர்யா இருவரும் 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் பெயரிடப்படாத சூர்யா-41 படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ‘உப்பென்னா’ படத்தின் நாயகிதான் இந்த கீர்த்தி ஷெட்டி.

சைக்காலஜி படித்த கீர்த்தி ஷெட்டி ஆரம்பத்தில் விளம்பரங்களில்தான் நடித்தார். இளம் வயது, வசீகரத்தோற்றம் இவை இரண்டும் கீர்த்தியை சினிவாவுக்குள் அழைத்து வந்தன.

தற்போது, தமிழில் பாலா- சூர்யா கூட்டணியுடன் கைக்கோர்த்திருப்பதால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

பாலா – சூர்யா மோதல் என வந்த செய்திகளால் பாயாசத்திற்காக நொறுக்கப்படும் அப்பளம் போல், சோர்ந்து போனவர் தற்போது மீண்டும் உற்சாகத்தில் இருக்கிறார்.
ஷூட்டிங் தடைப்பட்டு விடுமோ என்ற பயம்தான் அவரது சோர்வுக்கு காரணம்.

இந்நிலையில் தனது மேனேஜர் தரப்பை, பட வாய்ப்புகளைக் கவர முழு வீச்சில் இறக்கி விட்டிருக்கிறாராம். சூர்யாவுடன் நடித்த படம் வெளியாவதற்குள், தமிழின் கமர்ஷியல் ஹீரோக்களுடன் இரண்டு மூன்று படங்களாவது கமிட்டாகி விட வேண்டுமென்பதுதான் கீர்த்தி ஷெட்டியின் திட்டமாம்.

இதற்காக அவரது தெலுங்கு மேனேஜர், வாய்ப்புகளுக்காக கோலிவுட்டில் ரவுண்ட் அடித்தவண்ணம் இருக்கிறாராம்.

நயன்தாரா பட ப்ரமோஷன்களில் கலந்து கொள்ளாததன் ரகசியம்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்கள் தங்களது படங்கள் வெளியாகும் போது மட்டுமே வார இதழ்கள், தினசரிகள், எஃப்.எம், இணையதளங்கள் என அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி கொடுப்பார்கள். அந்த நேரத்தில், உசிலம்பட்டி டைம்ஸ், டி.கல்லுப்பட்டி பேப்பர் என லோக்கல் மீடியா ஒன்றைக் கூட விடாமல் எல்லோருக்கும் பேட்டி கொடுப்பார்கள்.

இந்த பேட்டி பாணியைதான் தற்போது அனைத்து நட்சத்திரங்களும் பின்பற்றி வருகிறார்கள்.

ஹீரோக்களுக்கு போட்டியாக, இதே போல் ப்ரமோஷன்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருபவர் நயன்தாரா. சில நேரங்களில் பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தப் படங்களுக்கும் கூட, அப்பட ப்ரமோஷன்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து இருக்கிறார் நயன்தாரா.

அதெப்படி என்று விசாரித்தால், ஒரு படத்தில் கமிட்டாகும் போதே, ஒப்பந்தந்தில் பட ப்ரமோஷன் தொடர்பாக சில கண்டிஷன்களை சேர்த்துவிட சொல்கிறாராம்.

ஏதாவது படத்தில் கொடுத்த கால்ஷீட் நாட்களில், நடித்து கொடுப்பதற்கு மட்டுமே வாங்கும் சம்பளம் பொருந்தும். படம் முடிந்து, அதை மக்களிடையே கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பர பிரச்சாரங்களில் கலந்து கொள்ள முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட சொல்கிறாராம். இதனால் நயன்தாராவை நீங்கள்தான் படத்தின் ஹீரோயின். அதனால் பேட்டி கொடுங்கள். ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளரால் எந்தவித நெருக்கடியும் கொடுக்க முடியாது.

அதேபோல் விக்னேஷ் சிவனும் அவரும் சேர்ந்து தயாரித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ப்ரமோஷனிலும் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்பதால், அவரை கேள்வி கேட்கவும் வழியில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...