’லியோ’ படம் கலவையான விமர்சனத்தில் சிக்கியது என்றால், த்ரிஷா அப்படத்தில் நடித்ததால் மன்சூர் அலிகானின் கமெண்ட் சர்ச்சையில் காயம்பட்டுப் போனார்.
இந்த பிரச்சினை ஓரளவிற்கு அமைதியாகிவிட இணையத்தில் கொதித்து எழுந்த நெட்டிசன்கள் அவரவர் வேலைகளைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.
இந்நிலையில்தான் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்திருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த த்ரிஷா சமூக ஊடகத்தில், அனிமல் படத்தின் போஸ்டர் ஒன்றுடன் “One word-cult! Pppppppaaaaaahhhhhhh” என்ற கமெண்ட்டை போட்டு கைத்தட்டும் எமோஜிகளுடன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அவ்வளவுதான் ஆங்காங்கே வேலைகளைப் பார்க்க கிளம்பிய நெட்டிசன்கள் மீண்டும் கமெண்ட்களை போட இணையத்தில் குவிந்துவிட்டனர்.
‘அனிமல்’ படத்துல ஹீரோயின் ப்ராவோட ஸ்ட்ராப்பை பிடித்து இழுத்துவிட்டு ஹீரோ காயப்படுத்துற மாதிரியான காட்சிகள் இருக்குற படத்தை நீங்க எதிர்த்து கேள்வி கேட்க மாட்டீங்களா’ன் என்று ஆளாளுக்கு கமெண்ட் போரை தொடங்கிவிட்டார்கள்.
இதேபோல்தானே மன்சூர் அலிகான் பேட்டியில் ஜாலியாக சொன்னார் என்றும் சிலர் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தார்கள். பிரச்சினை எங்கேயோ திசை மாறிப் போகிறதே என்று சுதாரித்த த்ரிஷா, மேற்கொண்டு தாக்குப்பிடிக்க முடியாமல் ட்ரோலுக்கு பயந்து தனது பதிவை நீக்கிவிட்டார்.