No menu items!

கணவருக்காக அக்காவான நயன்!

கணவருக்காக அக்காவான நயன்!

லைகா ப்ரொடக்ஷனில் அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழந்ததில் நயன் தாராவுக்கு ரொம்பவே வருத்தம்.

எப்படியாவது விக்னேஷ் சிவனை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் முன்நிறுத்தி விடவேண்டுமென்பதில் நயன் தாரா ரொம்பவே கவனமாக இருக்கிறார்.

இதனால்தான் ‘லவ் டுடே’ மூலம் ஹிட்டடித்து, அடுத்தப்படத்திலும் ஹீரோவாக நான்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க்கும் பிரதீப்பை சுற்றி சுற்றி வருகிறார் விக்னேஷ் சிவன். காரணம் விக்னேஷ் சிவனுடைய கதைக்கு ஏற்ற ஒரே ஆள் பிரதீப்தான். அவரது அடுத்தப்படத்திற்கும் எதிர்பார்பு இருக்கும். அதையும் பயன்படுத்தி கொள்ளலாம் என விக்னேஷ் சிவன் நினைப்பதுதான்.

ஆனால் பிரதீப் ரங்கநாதன் 20 கோடி சம்பளம் கேட்கிறாராம். இதனால்தான் கமல் ஹாஸனின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் விக்கி – பிரதீப்பை வைத்து தயாரிக்க திட்டமிட்ட படத்தை கைவிட்டுவிட்டது.
ஆனாலும் விக்கி பிரதீப்பை விட்டு விலகவில்லை. தங்களது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கலாம் என்று விக்கி திட்டமிட்ட நிலையில்தான் வசமாக வந்து மாட்டிக்கொண்டிருக்கிறது லியோ பட தயாரிப்பு நிறுவனம்.

எல்லாம் ஓகே என்று சொன்ன தயாரிப்பாளர் லலித் குமார் போட்ட ஒரே கண்டிஷன் நயன்தாரா அந்தப்படத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இதனால் நயன்தாரா வேறு வழியில்லாமல் கணவருக்காக ஓகே சொன்னதால், படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

இதில் நயன்தாரா ஹீரோயினும் இல்லை. பிரதீப்புக்கு ஜோடியும் இல்லை. ஆனால் பிரதீப்பின் அக்காவாக நடிக்கப் போகிறாராம்.

படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஒரு காதல் கதையாக இருக்குமாம்.
இரட்டை அர்த்தத்தில் காட்சிகள் வைப்பதில் பிரதீப்புக்குப் போட்டியாக எஸ்.ஜே. சூர்யாவும், விக்னேஷ் சிவனும் இருக்கிறார்கள். இதனால் இந்தப்படம் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களுடன் வெளியான படங்களிலேயே உச்சமாக இருக்குமோ என்று இப்போதே பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

நயன் – விக்கிக்குப் போட்டியாக புதிய ரவுடி ஜோடி

கோலிவுட்டில் ஏற்கனவே ஒரு ரவுடி ஜோடி இருக்கிறது. ‘நானும் ரவுடிதான்’ படம் மூலம் காதலில் விழுந்து, அப்புறம் சர்ச்சைகளில் உருண்டு எழுந்து, திருமணத்தில் கைக்கோர்த்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும்தான் கோலிவுட்டின் ரவுடி ஜோடி.

இப்போது இவர்களைப் போலவே டோலிவுட்டிலும் ஒரு ரவுடி ஜோடி ரெடி என்கிறார்கள்.

’அர்ஜூன் ரெட்டி’ படத்தில் கவனத்தை ஈர்த்த விஜய் தேவரகொண்டா, தன்னை ஒரு ரவுடி என்று செல்லமாக கூற, அதையே தெலுங்கு சினிமா ரசிகைகள் அவரது செல்லப்பெயராக கொண்டாடுகின்றனர். தனது சமூக ஊடகப் பதிவுகளிலும் ரவுடி என்று குறிப்பிடுவது விஜய் தேவரகொண்டாவின் வழக்கம்.

இவர் சினிமாவை தாண்டி இப்போது Rowdy Wear hoodie என்கிற ப்ராண்டை தொடங்கியுள்ளார். இந்த ப்ராண்ட் ஹூடியை அணிந்து கொண்டு, நடைபெற்ற சட்ட சபைத்தேர்தலில் ஒட்டுப் போட வந்தார். விஜய் தேவரகொண்டாவின் இந்த ரவுடி ஹூடி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால் மறுநாள் இதே ப்ராண்ட் ஹூடியை அணிந்து கொண்டு ராஷ்மிகா மந்தானா விமான நிலையத்திற்கு வந்ததுதான் இப்போது டோலிவிட்டின் ஹாட் சமாச்சாரம் ஆகியிருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் சொல்லி வைத்து கொண்டு ஒரே மாதிரியான ஹூடியை அணிந்து கொண்டு பரபரப்பை கிளப்பினார்களா அல்லது விஜய் தேவரகொண்டா ப்ராண்ட்டிற்காக ராஷ்மிகா இலவச பப்ளிசிட்டி செய்கிறாரா என்று யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

’கீதா கோவிந்தம்’, ‘டியர் காமரேட்’ என அடுத்தடுத்து இரு படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தானாவுக்கும் காதல் என்ற கிசுகிசு மிக்ஜாம் புயலைப் போல் டோலிவுட்டில் ரொம்ப நாட்களாகவே எங்கும் நகராமல் ஒரே தளத்தில் சுழற்றி சுழற்றி அடித்து கொண்டிருக்கிறது.

கூடிய சீக்கிரமே இந்த ரவுடி ஜோடியின் காதல் பஞ்சாயத்து ஏதாவது முடிவுக்கு வருமென எதிர்பார்த்து காத்திருக்கிறது டோலிவுட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...