No menu items!

ஆளுநருக்கான கூடுதல் அதிகாரம் ரத்து: திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

ஆளுநருக்கான கூடுதல் அதிகாரம் ரத்து: திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு  முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (20-04-24) காலை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். பின்னர் அவர் அறிக்கையை ஸ்டாலின் கைகளில் கொடுத்தார். அதன்பின்னர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

64 பக்க திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் அரசமைப்பு திருத்தப்படும்.

ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

வங்கிகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

பா.ஜ.க அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியம் ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.

வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.

எல்பிஐ சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். பெட்ரோல் விலை ரூ. 75, டீசல் விலை ரூ.65 ஆக குறைக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

மின்சார வாகனத்துக்கு மானியம் உயர்த்தப்படும்.

விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

ரயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படும். ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

அனைத்து மாநில மொழிகளுக்கும் சம அந்தஸ்தும் மொழி வளர்ச்சிக்கும் சம அளவு நிதியும் வழங்கப்படும்.

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

உச்ச நீதிமன்றக் கிளை சென்னையில் அமைக்கப்படும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

இந்தியா முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.

தென்னிந்திய வானிலைக்கு தனித்த செயற்கைக்கோள் ஏவ நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.

மத்திய அரசு அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ) ரத்து செய்யப்படும். சிறுபான்மையினர் சரிசமமாய் நடத்தப்படுவர்.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது.

இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

மாநிலம் முழுவதும் இலவச வைஃபை வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு ‘ நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில் புதியதாக அமைக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.

ஆகிய முக்கிய அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...