No menu items!

பாரசிட்டமால் மாத்திரை யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம்? | டாக்டர் ஜெயகுமார் ரெட்டி | 2

பாரசிட்டமால் மாத்திரை யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம்? | டாக்டர் ஜெயகுமார் ரெட்டி | 2

பாரசிட்டமால் ரொம்ப பொதுவாய் பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரை. காய்ச்சல், தலைவலி என எல்லாவற்றுக்கும் பாரசிட்டமால் மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். இப்படி வகைதொகையில்லாமல் பாரசிட்டமால் எடுத்துக்கொள்வது சரியா? பாரசிட்டமால் மாத்திரைகளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? அதிக அளவில் பராசிட்டமால் சாப்பிட்டால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும்? இது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு தந்த பேட்டி இங்கே…

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“யார் யார், எப்போது, எவ்வளவு டோஸ் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

பொதுவாக ஒருவருக்கு மாத்திரைகள் அளவு அவரது எடை பார்த்தே பரிந்துரை செய்யப்படும்; வயசு பார்த்து அல்ல. 5 கிகி இருந்தால் இவ்வளவு, 10 கிகி இருந்தால் இவ்வளவு – இப்படி எடை பார்த்துதான் கொடுக்க வேண்டும். 1 கிகி எடைக்கு 15 Mg அளவு மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது. இதன்படி 10 கிகி எடை உடைய குழந்தைக்கு 150 Mg கொடுக்க வேண்டும். 10 வயதிலேயே 50 கிகி எடை இருக்கும் பசங்க இருக்கிறார்கள். அவர்களுக்கு 750 Mg மாத்திரை தேவைப்படும். இதுபோல் 5 வயதில் ஒரு பையன் 25 கிகி இருக்கலாம். அதே 5 வயது  இருக்கும் இன்னொரு பையன் 15 கிகி இருக்கலாம். இந்த இரண்டு 5 வயது பையன்களுக்கும் ஒரே அளவு மாத்திரை கொடுக்கக்கூடாது; அவர்கள் எடைக்கு ஏற்ப மாத்திரை அளவை குறைத்தோ கூட்டியோதான் கொடுக்க வேண்டும்.

இன்னொன்று முக்கியமாக பார்க்க வேண்டியது… லிவர், கிட்னி பாதிப்புகள் போன்ற வேறு பல பாதிப்புகள் இருப்பவர்கள் அதற்கேற்ப டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து பின்னரே மாத்திரை எடுத்துக்கொள்வது சிறந்தது.

ஒரு முறை எடுத்துக்கொள்ளும் மாத்திரை அடுத்த ஆறு மணி நேரங்கள் வேலை செய்யும். எனவே, ஆறு மணிக்கு ஒன்று வீதம் ஒரு நாளைக்கு நான்கு மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சிலர் என்ன செய்கிறார்கள்? காய்ச்சல் குறையவில்லை என்றால் நான்கு மணி நேரங்களுக்கு ஒருமுறை, இன்னும் விபரீதமாக இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை எல்லாம் மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள். இது ஆபத்தானது?

மாத்திரை எடுத்து இரண்டு மணி நேரங்கள் ஆகியும் காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனே இன்னொரு மாத்திரை எடுப்பதற்கு பதிலாக வேறு என்னன்ன வழிகள் உள்ளது என்று பார்க்கலாம். மென்மையான ஒரு ஈரத்துணியால் உடலை துடைத்துவிடலாம். குளிர்கிறது என்று 2-3 சட்டைகள் போட்டிருந்தால் ஒன்றை எடுத்துவிடலாம். அல்லது மாத்திரைகளைத்தான் மாற்றிப் பார்க்கலாம்.

சில வீடுகளில் குழந்தைகளுக்கு ஒரு முறை காய்ச்சலுக்கு வாங்கிய சிரப் காய்ச்சல் சரியான பின்னரும் மீதி இருக்கும். அதை அப்படியே வீட்டில் வைத்திருப்பார்கள். சில மாதங்கள் கழித்து மீண்டும் காய்ச்சல் வரும்போது, வீட்டில்தான் மருந்து இருக்கிறதே என்று இந்த பாட்டில் சிரப்பை எடுத்து குழந்தைக்கு கொடுப்பார்கள். இது குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒருமுறை திறந்த பாட்டிலை ஒரு மாதத்துக்கு மேல் வைத்து பயன்படுத்துவது நல்லதல்ல. பாட்டிலை திறந்துவிட்ட பின்னர் அதில் இருக்கும் மருந்தின் சக்தி குறையும். எனவே, நாட்களான பின்னர் அதன் செயல்திறன் குறையும். அதிலும், இரண்டு மருந்துகளை சேர்த்ததாக இருந்தால் 10 நாட்களுக்கு மேல் பயன்படுத்தவே கூடாது.

திறக்காத பாட்டிலாக இருந்தால் காலாவதி தேதி பார்த்து பயன்படுத்தலாம்.

சிலர் உடல் சோர்வாக இருந்தாலே காய்ச்சல் வரப்போகிறதோ என்று முன்னரை மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியா?

தொடர்ந்து பேசுவோம்…”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...