No menu items!

பாரசிட்டமால் மாத்திரை யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம்? | டாக்டர் ஜெயகுமார் ரெட்டி | 1

பாரசிட்டமால் மாத்திரை யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம்? | டாக்டர் ஜெயகுமார் ரெட்டி | 1

பாரசிட்டமால் ரொம்ப பொதுவாய் பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரை. காய்ச்சல், தலைவலி என எல்லாவற்றுக்கும் பாரசிட்டமால் மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஜூரம் குறையாத போதும் 104 டிகிரி என எகிறும்போதும் பாரசிட்டமால் அதிக டோஸ் எடுத்துக்கொள்கிறோம்? 4 அல்லது 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை என அடிக்கடி வேறு எடுத்துக்கொள்கிறோம். இப்படி வகைதொகையில்லாமல் பாரசிட்டமால் எடுத்துக்கொள்வது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட டோஸை விட அதிகமாக கொடுப்பது அதிக ஆபத்து என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். பாரசிட்டமால் மாத்திரைகளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? அதிக அளவில் பராசிட்டமால் சாப்பிட்டால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும்?

இது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு தந்த பேட்டி இங்கே…

“காய்ச்சல், தலைவலி வந்தால் பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம் ஊரில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே பாராசிட்டமால் விற்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் யார் யார், எதற்கு, எப்போது, எவ்வளவு டோஸ் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம் என்று மக்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். இது நம்மூர் மக்களுக்கு தெரியாது. இதனால், உலகம் எங்கும் இல்லாத அளவு பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம் மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் கொரோனா பரவலுக்குப் பின்னர் உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தாலே காய்ச்சல் வரப்போகிறது என பயந்து உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள்.

இப்படி அடிக்கடி, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக டோஸ் பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படலாம். பாராசிட்ட மாலை அளவுக்கதிகமாக உட்கொள்வதன் விளைவாக கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

மேலும், காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.

நம்மூரில் மக்கள் காய்ச்சல் உள்ளதா எனப் பார்க்க கையை தலையில் வைத்து தொட்டு பார்க்கிறார்கள். கையை வைத்து உடலின் வெப்பநிலையை கணிக்காமல் தெர்மா மீட்டரை பயன்படுத்தி மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், கை வைத்து பார்க்கும்போது நம் கணிப்பு தவறாக போக அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக தலையில்… தலையில் கொழுப்பு இல்லை; எலும்புக்கூடால் போர்த்தப்பட்டுள்ளது. இதனால், உடலின் வெப்பநிலையை விட தலையில் அதிக வெப்பநிலை இருக்கும். எனவே, தெர்மா மீட்டரை அக்குளில் வைத்து, 3 நிமிடங்கள் காத்திருந்து, எடுத்து பார்க்க வேண்டும். 100 டிகிரி வரைக்கும் கவலைப்பட தேவையில்லை. 100 டிகிரியைத் தாண்டிய பிறகு பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

பாரசிட்டமால் மாத்திரை குறித்து நம் மக்களிடம் இருக்கும் இன்னொரு தவறான நம்பிக்கை வயதை சொல்லி மருந்து கடைகளில் மாத்திரை அல்லது சிரப் டோஸ் அளவு கேட்பது. ஒருவர் வயதுக்கு ஏற்ப அல்ல, உடல் எடைக்கு ஏற்பவே பாரமிட்டமால் மாத்திரை அளவு பரிந்துரைக்கப்படுகிறது. ஒரே வயதுடைய இருவரது உடல் எடை அளவு மாறுபடலாம். எனவேதான், எடை பார்த்து மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சரி, யார் யார், எப்போது, எவ்வளவு டோஸ் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து பேசுவோம்…”

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...