No menu items!

கமலுடன் இணையும் மம்முட்டி

கமலுடன் இணையும் மம்முட்டி

பகத் பாசில் நடிப்பில் மாலிக் என்ற படத்தை இயக்கியவர் மகேஷ் நாராயண். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் கமல்ஹாசனையும், மம்முட்டியையும் இணைந்து நடிக்கவைக்கும் முயற்சியில் உள்ளார். இதுதொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. 2 மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் பட்சத்தில் ஏராளமான பொருள்செலவுடன் இப்படத்தை தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுபற்றி கமல் தரப்பில் இருந்தோ, மம்முட்டி தரப்பில் இருந்தோ உறுதியான தகவல் ஏதும் வரவில்லை.

அதேநேரத்தில் இப்படத்தில் சிம்புவையும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக மல்லுவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தொடர்பான அதிகாரவூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் பிரபாஸ் – அனுஷ்கா

‘பாகுபலி’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மிக நெருக்கமாக பிரபாஸ் – அனுஷகா ஜோடி இடம் பிடித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையப் போவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மாருதி இயக்கும் ’ராஜா டீலக்ஸ்’ என்ற படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. இந்த படம் முழுநீள காமெடி படமாக இருக்கும் என்றும் இன்னும் சில மாதங்களில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

பாலிவுட் படத்தில் மைக் டைசன்

பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், ‘லிகர்’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் அவருடன் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடிய மைக் டைசனுக்கு விஜய் தேவரகொண்டா, ‘லிகர்’ படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோகர் உள்ளிட்டோர் வாழ்த்து சொல்லி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...