No menu items!

யானை – எப்படியிருக்கிறது?

யானை – எப்படியிருக்கிறது?

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படம் யானை.

கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தின் கதை. தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களது பிள்ளைகள். அவர்களுக்குள் ஏற்படும் அன்பும் முரணையும் சுவையாக சொல்லியிருக்கிறார் ஹரி.

இரண்டாம் மனைவியின் மகனாக வருகிறார் அருண் விஜய். குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசத்தை பொழியும் கதாபாத்திரம். அன்பைப் போல் அடிதடியும் அவரிடம் நிறைய இருக்கிறது. குடும்பத்துக்காக அவர் பேசும் வசனங்கள் ஆவேசத்தின் உச்சம்.

முதல் மனைவியின் மூத்த மகன் சமுத்திரகனி. சாதிப் பார்த்து பழகுபவர். அவருக்கு எல்லாமே சாதிதான். அவரால் ஏற்படும் நிகழ்வுகள் படத்தை நகர்த்தி செல்கிறது.

பொதுவாய் ஹரியின் படங்களில் சத்தம் அதிகமாய் இருக்கும் இந்தப் படத்தில் அதைக் குறைத்திருக்கிறார். பாசத்தை அதிகரித்திருக்கிறார்.

சாதியா? பாசமா? இந்த இரண்டில் எது வெல்கிறது என்பதே க்ளைமேக்ஸ். ஹரி அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஹரி படங்களின் டெம்ப்ளேட் காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. ஆனாலும் யானை வழக்கமான ஹரி படங்களிலிருந்து விலகி நிற்பதற்கு காரணம் எடுத்துக் கொண்ட கதை.

கிறிஸ்துவப் பெண்ணாக ப்ரியா பவானிசங்கர். அருண் விஜய்க்கும் இவருக்கும் ஏற்படும் காதல் இளமை ததும்ப இருக்கிறது.

சமுத்திரகனியின் மகள் அம்மு அபிராமி தன்னுடன் படிக்கும் இஸ்லாமிய இளைஞரை எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்ததற்கு காரணம் அருண் விஜய் என அண்ணன்கள் முடிவு செய்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற காட்சிகளில் பழமை நெடி.

வில்லனாக வரும் கருடன் ராமசந்திர ராஜூ மற்றும் ஆடுகளம் ஜெயபாலன் நடிப்பு யதார்த்தம்.

வில்லனைக் கொல்ல வந்த அருண் விஜய் அவரை கொல்லாமல் விட்டு செல்வதும் அதற்கான காரணத்தை அவரிடமே சொல்வதும் செண்டிமெண்ட் கனெக்ட்.

ஹரி படங்களில் எப்போதுமே இசை பலம். இந்தப் படத்திலும் அப்படியே. இசை ஜி.வி.பிரகாஷ்.

சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு நாமும் சண்டை போடும் உணர்வைத் தருகிறது.

மொத்தத்தில் காட்டு யானை அல்ல, குடும்ப யானை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...