No menu items!

இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

சினிமா காதலர்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய உலக சினிமாக்கள் குறித்து, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘லியோ’ வைரல் விமர்சகர் சத்யேந்திரா பகிர்ந்திருந்தார். அந்த 12 உலக சினிமாக்கள் இங்கே.

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

டே ஃபார் நைட் (Day for Night, 1973), நானூறு உதைகள் (400 Blows, 1959) & அடீல் எச். கதை (The Story of Adele H, 1975)

உலக சினிமாவை பாதித்த பிரஞ்சு புதிய அலை இயக்க இயக்குநர்களில் முக்கியமானவர் த்ரூபோ. முதலில், பிரான்சில் 1951இல் வெளிவந்த ‘காகியேது சினிமா’ என்ற பத்திரிகையில் சினிமா விமர்சனங்கள் எழுதிவந்த த்ரூபோ தனது கட்டுரைகள் மூலமே உலக சினிமாவில் பெரும் தாக்கத்தை உருவாக்கினாட். பின்னர் அதேபோல் தனது திரைப்படங்கள் வாயிலாகவும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தினார். த்ரூபோவின் எல்லாப் படங்களுமே பார்க்க வேண்டியவை. அதிலும் இந்த மூன்றும் மிக முக்கியமானவை.

தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் இன்றைய நவீன யுகத்தில், சிறுவர்களின் உலகில் பெற்றோர்களின் இடம் காலியாகவே உள்ளது. பரிசுகள் கொண்டோ தண்டனைகளாலோ அந்த இடத்தை நிறைத்துவிட பெற்றோர்கள் முயல்கின்றனர். ஆனால் பரிசுகளும் தண்டனைகளும் அந்த வெற்றிடத்தை மேலும் அதிகமாக்கதான் செய்கின்றன என்பதை பெற்றோர்கள் உணர்வதில்லை.

இந்த எளிய உண்மையை அதைவிட எளிய வடிவில் திரையில் கொண்டு வந்தவர், த்ரூபோ (Francois Truffaut). படத்தின் பெயர் ‘400 Blows’. 1959இல் வெளியான இத்திரைப்படம் த்ரூபோவின் வாழ்க்கையை பிரதிபலித்தது எனலாம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் குழந்தைகளின் உலகை சிறைக் கூடமாக மாற்றிவிட்டன. பிரச்சாரமோ, கண்ணீர் துளிகளோ எதுவுமின்றி த்ரூபோ இதனை இந்த படத்தில் துல்லியமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.

அத்துடன், தண்டனைகள் குற்றவாளிகளை திருத்துவதைவிட, குற்றங்களையும் குற்றவாளிகளையும் அதிகரிக்கவே துணைபோகின்றன என்பதையும் த்ரூபோவின் ‘நானூறு உதைகள்’ திரைப்படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

சிறுவர்களின் உலகம் இறுக்கமான அதிகாரங்களாலும், புரிந்துகொள்ளப்படாத புறக்கணிப்பாலும் எவ்வாறு சிதைவுறுகிறது என்பதையும் நேர்மையாக காட்சிப்படுத்திய திரைப்படம் என்று இதனைக் கூறலாம்.

400 Blows போலவே த்ருபோவின் Day for Night, The Story of Adele H –   திரைப்படங்களும் பார்க்க வேண்டியவை.

Day for Night முழுப் படமும் யூ டியூப்பில் ஆங்கில சப் டைட்டிலுடன் உள்ளது. பார்க்க…

4 BLOWS முழுப் படமும் யூ டியூப்பில் ஆங்கில சப் டைட்டிலுடன் உள்ளது. பார்க்க…

ஜுராஸிக் பார்க் (Jurassic Park, 1993)

புகழ்பெற்ற அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் 1990இல் எழுதி வெளியிட்ட ‘ஜுராஸிக் பார்க்’ என்ற நாவலை தழுவி தான் இப்படம் எடுக்கப்பட்டது.

நடு அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவைச் சேர்ந்த ஈஸ்லா நுப்லார் என்ற கற்பனைத் தீவில் இந்தப் படத்தின் கதை நிகழ்கிறது. அங்கு ஒரு செல்வந்தர், மரபணு வல்லுநர்களின் துணையுடன் அழிந்துபோன உயிரினங்களான தொன்மாக்களை (Dinosaurs) படியெடுப்பு முறையில் உயிர்ப்பித்துப் பின் அங்கு தான் உருவாக்கிய உயிரியல் பூங்காவில் உலவவிடுகிறார். அப் பூங்காவில் ஏற்படும் எதிர்பாரா இடர்களையும், டினோசர்களிடம் இருந்து தப்ப கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும்தான் இப் படம்.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...