No menu items!

Don’t Miss Movies – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

Don’t Miss Movies – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

சினிமா காதலர்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய உலக சினிமாக்கள் குறித்து, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘லியோ’ வைரல் விமர்சகர் சத்யேந்திரா பகிர்ந்திருந்தார். அந்த 12 உலக சினிமாக்கள் இங்கே.

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

லாஸ்ட் எம்பெரர் (The Last Emperor, 1987)

சீனப் பேரரசின் கடைசி மன்னரான பூயி-யின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் மிக அற்புதமான கலைநேர்த்திமிக்க படம் ‘The Last Emperor ’. பெர்னார்டோ பெர்டோலூசி இயக்கியது.

சீனாவில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சூழல். சிறு வயதில் முடிசூட்டப்பட்ட அரச குடும்பத்து சிறுவன் பு-யி புரட்சியால் அரசிழந்து அரண்மனையை விட்டு வெளியேற்றப் படுவான். அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சாதாரணப் பார்வையாளனாக அந்த அரண்மனைக்கு திரும்ப வருவார் பூயி. முதுமைப் பருவத்தை எட்டியிருக்கும் பூயி, தான் ஆனந்தமாய் ஓடியாடி விளையாடிக் களித்த தனது அரண்மனையைக் காண விழைகிறார். அது இப்போது அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. உள்ளே நுழைய நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். தான் வாழ்ந்து களித்த இடத்திற்கு நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறார். அவர் கண்முன்னால் வெறிச்சிட்டிருக்கிறது மிகப்பிரமாண்டமான அரண்மனை. படை வீரர்கள் அணிவகுத்து நிற்கும் மிகப்பெரிய மைதானத்தின் வெறுமை. அந்தச்சூழல் அவரைப் பழைய ஞாபகங்களைக் கிளர்த்துகிறது. அவரது உடலெங்கும் பரபரப்பும் பதட்டமும் ஏறியடிக்க பிரதான அரசவைக்குச் செல்லும் நீண்ட படிக்கட்டுகளில் ஏறி நடக்கிறார். எதிரில் தனிமையும் இருளும் சூழ்ந்த மண்டபத்தில் அவர் அமர்ந்திருந்த தங்கத்தாலான சிம்மாசனம், கயிற்றுத்தடுப்பு கட்டித் தடை செய்யப்பட்டிருக்கிறது. அவர் கொந்தளிக்கும் உணர்ச்சிகளுடன் பாய்ந்து கயிற்றுத் தடுப்பைத் தாண்டி, சிம்மாசனத்தின் படிகளில் உத்வேகத்துடன் ஏறுகிறார்.

அப்போது அங்கு வரும் காவலாளியின் மகனான ஒரு சிறுவன், ‘அங்கே போக அனுமதியில்லை’ என்று தடுக்கிறான். ‘நான் அங்கே போகவேண்டும் ஏனெனில் நான் அமர்ந்திருந்த சிம்மாசனம் அது’ என்கிறார் பூயி. சிறுவன் ஒன்றும் புரியாமல், “யார் நீங்கள்?” என்று கேட்க, “நான் சீனாவின் பேரரசனாக இருந்தவன்” என்கிறார் பூயி. சிறுவன் வியப்புடன், “நான் எப்படி நம்புவது? நிரூபியுங்கள் பார்க்கலாம்” என்கிறான். பூயி, உடனே ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் பாய்ந்து சென்று சிம்மாசனத்தில் அமர்கிறார். முகத்தில் மகிழ்ச்சி பூரிக்கிறது. மெதுவாகப் பக்கவாட்டில் குனிந்து, தளப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளை எடுத்துத் தன் சட்டையில் துடைத்து சுத்தம் செய்து அந்தச்சிறுவனிடம் கொடுக்கிறார்.  அது வெட்டுக்கிளி வளர்க்கும் ஒரு சிறிய மரக்கூடு! குழந்தைப் பருவத்தில் அவர் விளையாடும்போது அதை மறைத்து வைத்தது. அந்தக் கணத்தில் பூயிக்கும் சிறுவனுக்கும் ஏற்பட்ட சந்தோஷத்தை அத்திரைப்படம் காலங்களைக் கடந்து அற்புதமாக்குகிறது.

ஒரு படத்தில் ப்ளாஷ் பேக்  உத்தியை  எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதற்கும் டிரான்சிஷன் எனப்படும் காட்சி மாற்ற உத்திக்கும் இப்படம் ஒரு டிக்‌ஷ்னரி எனலாம்.

ஸ்வீட் ஹோஸ்டேஜ் (Sweet Hostage, 1975)

அமெரிக்க எழுத்தாளர் நதானியேல் பெஞ்ச்லியின் ‘வெல்கம் டு சனாடு’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்கத் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம் இது.

மனநல காப்பகத்தில் இருந்து தப்பியோடிய 31 வயதான மனநோயாளி, படிப்பறிவில்லாத, ஒரு சிறுமியை அருகிலுள்ள பண்ணையில் இருந்து கடத்தி, ஆள் நடமாட்டம் இல்லாத மலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார். அங்கு அவர் அவளுக்கு படிக்க கற்றுக்கொடுக்கிறார். இன்னொரு பக்கம் சிறுமியையும் மனநோயாளியையும் காவல்துறை தேடுகிறது. இதனிடையே மனநோயாளி பிடியில் இருக்கும் சிறுமி ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்படுகிறாள். சிறுமியும் மனநோயாளியும் இருக்கும் இடத்தை துப்பறிந்து நெருக்கும் காவல்துறையினர், மனநோயாளியிடம் இருந்து சிறுமையைக் காப்பாற்ற துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். அப்போது மனநோயாளி தற்கொலை செய்துகொள்கிறார். இறுதியில் சிறுமி பெற்றோருடன் மீண்டும் இணைகிறாள்.

லிண்டா பிளேயர், மார்ட்டின் ஷீன் இருவரின் நடிப்பும் மிகப் பிரமாதமாக இருக்கும்.

இந்தப் படத்தை தழுவிதான் தமிழில் கமல் நடித்த ‘குணா’, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ படங்கள் எடுக்கப்பட்டன.

யூடியூப்பில் படத்தை பார்க்க…

அவதார்: தி வே ஆஃப் வாட்டர்  (Avatar 2, 2022)

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார் 1’, ‘அவதார் 2’ என இரண்டு பாகங்கள் வெளிவந்தது. இதில் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகமே எனக்கு பிடித்திருந்தது.

பண்டோரா உலகின் நவி இன மக்களுடன் பழகி ஆராய்வதற்காக அனுப்பப்படும் நாயகன், நவி இன மக்களுக்காகப் போராடுவதாக ‘அவதார்’ படத்தின் முதல் பாகத்தை முடித்திருப்பார், ஜேம்ஸ் கேமரூன். 2ஆம் பாகத்தில் நம்பிக்கைத் துரோகியாகிவிட்ட, ஜேக் சல்லி, அவர் மனைவி நெய்த்ரி மற்றும் அவர் குழந்தைகளைப் பழிவாங்க பெரும் படைகளுடன் வருகிறார் கர்னல். அவர் வருவதை அறிந்து, ‘கடல்வாசிகள்’ வாழும் தீவில் தஞ்சமடைகிறார்கள் ஜேக் சல்லியும் அவர் குடும்பமும். அங்கும் படைகளுடன் வந்துவிடும் கர்னல், நினைத்தபடி அவர்களைப்பழி வாங்கினாரா, இல்லையா என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் 3டி தொழில்நுட்பத்தில் ஜேம்ஸ் கேமரூன் காட்டும் நீல நிற, கிராபிக்ஸ் வனமும் அதைத் தாண்டிய கடல் தீவும் விஷூவல் பிரம்மாண்டம். பார்வையாளர்களை புதிய அனுபவத்துக்கு கைபிடித்து அழைத்துச் செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...