No menu items!

Don’t Miss Movies – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

Don’t Miss Movies – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

சினிமா காதலர்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய உலக சினிமாக்கள் குறித்து, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘லியோ’ வைரல் விமர்சகர் சத்யேந்திரா பகிர்ந்திருந்தார். அந்த 12 உலக சினிமாக்கள் இங்கே.

ரோமன் ஹாலிடே (Roman Holiday, 1953)

அமெரிக்க திரைப்பட இயக்குநர் வில்லியம் வைலரின் கனவுப் படம் இது.

இத்தாலியின் ரோம் நகருக்கு சுற்றுப்பயணம் வரும் பிரிட்டிஷ் இளவரசி ராஜ கெடுபிடி பிடிக்கமால் தங்கும் விடுதியிலிருந்து இரவோடு இரவாக தப்பித்து ஊரை சுற்றிப் பார்க்க கிளம்புகிறாள். அந்த ஊரில் அவள் யாரென்றே தெரியாமல் நிருபராக இருக்கும் இளைஞன் ஒருவனுடன் ஒரு இரவையும் பகலையும் கழிக்கிறாள். அவனும் அவள் யாரென்றே தெரியாமல் அவளோடு சேர்ந்து ஒருநாள் முழுக்க அவளோடு ஊரை சுற்றுகிறான். இன்னொரு பக்கம், இளவரசியைக் காணாமல் நாடே அல்லோகலப்படுவது.

கடைசியில் இளவரசியைக் கண்டுபிடித்து காவலர்கள் அழைத்து செல்கின்றனர். மறுநாள் இளவரசியோடு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. நேற்று அவனோடு நெருங்கி ஒடி உறவாடியவள் உயர் பாதுகாப்பு வளையத்தில் அரசியாக அமர்ந்திருக்க நிருபரோ கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறான். அவன் காமிரா போகஸ் ஆக படம் முடிகிறது.

இந்தப் படத்தை தழுவி உலகம் முழுவதும் பல மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளது. தமிழில் எம். ஜி. ஆர். எடுத்துள்ளார்.

பை சைக்கிள் தீவ்ஸ், (Bicycle Thieves, 1948)

உலக சினிமாவில் குறைகளே கண்டுபிடிக்க முடியாத ஒரு படம் என்றால் அது ‘பை சைக்கிள் தீவ்ஸ்’தான். இயக்குநர் விட்டோரியோ டிசிகா.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான இத்தாலி நகரத்தின் ஒரு ஏழைக் குடிமகனின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி நகரத்தில் கதாநாயகன் ரிச்சிவுக்கு சைக்கிள் இருந்தால் போஸ்டர் ஒட்டும் வேலை என்ற நிபந்தனையுடன் வேலை கிடைக்கிறது. வீட்டில் இருக்கும் பெட்ஷிட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்று, அதில் சைக்கிள் வாங்கிக் கொண்டு பெருமிதமாக வேலையில் சேர்கிறார். சிறுவயது மகனை பெட்ரோல் பங்கில் இறக்கி விட்டுவிட்டு, மாலையில் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு, முதல்நாள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கையில் அவரது சைக்கிள் களவாடப்படுகிறது. திருடனை துரத்திப் பிடிக்க முயற்சி செய்கிறார். திருடன் சிட்டாகப் பறந்துவிடுகிறான்.

ரிச்சி, போலிஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கிறார். சரியான நடவடிக்கை இல்லை. குறி சொல்லும் பெண்ணிடம் செல்கிறார். அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிறகு ஒருவழியாக, சைக்கிள் திருடியவனை அடையாளம் கண்டு பிடித்துக் கேட்கையில் கைகலப்பு உருவாகி, அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

சைக்கிள் இல்லாமல் வேலை இல்லை என்கிற எண்ணம் மனதைக் குடைந்தெடுக்க, வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் சுவரோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிளைத் திருடிவிடுகிறார். ஆனால், அவ்வளவு சாமர்த்தியம் இல்லாமையால் மாட்டிக்கொண்டு அடி வாங்குகிறார். பின்பு, மகன் புரூனோவுக்காக போலீஸிடம் போகாமல் மன்னித்து அனுப்புகிறார்கள். சிறுவயது மகன் முன்பு திருட்டுப் பட்டத்துடன் ரோட்டில் அடி வாங்கியது மனதை உறுத்த, கூனிக் குருகி நடந்து வருகையில் மகன் புரூனோ அப்பாவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.

லா ஸ்ட்ரடா (La Strada. 1954)

திரைப்பட மேதை பெடரிக்கோ பெலினி இயக்கிய படம்.

மார்பை சுற்றி இரும்பு சங்கிலி கட்டி அதை தன் பலம் கொண்டு அறுத்தெறியும் வித்தை செய்யும் ஜாம்பினோ முரடன், குடிகாரன், பெண் பித்தன். நாடோடி வித்தைக்காரனான ஜாம்பினோவிடம் சொற்ப பணத்திற்காக விற்கப்படுகிறாள் ஜெல்சொமினா. அவளிடம் எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் பிரியத்தை காட்டியதில்லை. தொடக்கம் முதல் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் பாவத்திற்குரிய பெண்ணாக இருக்கிறாள்.

ஜாம்பினோ அவளை ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லும் பொழுது அவள் முகத்தில் ஆவலும் பெருமிதமும் தோன்றும். அவனோ, அவளை தனியே விட்டுவிட்டு ஒரு வேசியோடு இரவை கழிக்க சென்றுவிடுகிறான். இரவெலாம் உறங்காமல் அவனிற்காக காத்திருக்கிறாள்.

தொடர்ந்து ஜாம்பினோ தன்னை புறக்கணிப்பதை பொருத்துகொள்ள இயலாமல் ஜெல்சினோ ஓர் இரவு அவனை விடுத்து ஓடி வெகு தூரம் வந்து ஒரு நகரை அடைகிறாள். பிறகு, அவளை தேடி வரும் ஜாம்பினோவிடம் தப்பிக்க முடியாமல் மீண்டும் அவனுடன் செல்கிறாள்.

ஒரு பயணத்தின் ஊடே அவர்கள் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தங்க நேரிடுகிறது. அன்றிரவு அவனிடம் தன் காதலை சொல்லுகின்றாள். அதற்கும் அவனிடம் கோபமும்  எரிச்சலுமே பதிலாய் இருக்கின்றது. ஒருநாள் அவள் உறங்கிக்கொண்டிருக்கும் போது. ஜாம்பினோ அவளை தனியே விட்டுவிட்டு செல்கின்றான். ஜெல்சொமினாவை கடைசியாய் நாம் பார்ப்பதும் அப்பொழுது தான்.

சில வருடங்கள் கழித்து… ஜாம்பினோ கடற்கரை சாலை வழி நடந்து செல்லும்போது ஜெல்சொமின இசைக்கும் அதே பாடலை கேட்கின்றான். அப்பாடலை பாடிய பெண்ணின் மூலம் ஜெல்சொமினா பைத்தியமாய் திரிந்து இறந்து போனதை அறிந்துகொள்கின்றான். குற்ற உணர்ச்சியில்  கடற்கரையில் அலையும் ஜாம்பினோ, சோகம் தாளாமல் பெருங்குரல் எடுத்து அழுவதோடு படம் முடிகின்றது.

தமிழில் பாலு மகேந்திரா நடிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மூன்றாம் பிறை’ இந்தப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதுதான்.

ஹெமைட் (Heimat, 1984)

உலகின் மிக நீளமான திரைப்படம் இது. மொத்தம் அறுபது மணி நேரம். முழுமையாக பார்க்க குறைந்தது மூன்று நாட்கள் ஆகும். 

முதலாம் உலகப் போரின் முடிவில் தொடங்கி 1982ஆம் ஆண்டுவரை ஒரு கிராமத்தில் நிகழும் சம்பவங்கள் வழி 65 ஆண்டுகால வரலாற்றைச் சொல்கிறது. பல்லாண்டு கால வரலாற்றையொற்றி பின்னப்பட்ட சம்பவங்களாதலால், கதை நிகழும் காலகட்டத்தை பார்வையாளர்களுக்குத் தெளிவாக உணர்த்துவதற்காகவும் சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவும், அந்தந்த ஆண்டுகளில் வெளியான புகழ்பெற்ற படங்களின் போஸ்டர்கள் காட்சிகளின் பின்னணியில் இடம்பெறுகின்றன. ஜெர்மனியப் படங்களின் போஸ்டர்கள் மட்டுமல்லாது Tati, Fellini போன்ற பிற நாடுகளின் சாதனை இயக்குநர்களின் படங்கள்கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அறுபது மணி நேரமானாலும் கொஞ்ச நேரம்கூட அலுப்பு தட்டாது. அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை  ஜெர்மனியத் திரைப்படம். எட்கர் ரூட்ஸ் இயக்கியுள்ளார்.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...