No menu items!

கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா

கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா

39 வயதாகி விட்டாலும் ஹீரோயினாகவே நடித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.

மளமளவென படங்களில் தூள் கிளப்பியவருக்கு கடந்த 3 ஆண்டுகள் கட்டாய ஓய்வாகி இருந்தது.

‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியானதும் இப்பொழுது மீண்டும் பரபரப்பாகி இருக்கிறார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவந்த பின்னர் மணி ரத்னம் தனது அடுத்தப்பட வேலைகளில் இறங்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மணி ரத்னத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கமல் இணையவிருக்கிறார்.

’இந்தியன் 2’ ஷூட்டிங் ஜனவரியுடன் முடிய இருக்கிறதாம். அதன் பிறகு தனது கமலும் ஃப்ரீதான்.

இப்போது விஷயம் என்னவென்றால், கமலுக்கு ஜோடி யார் என்று கேட்டால், வேறு யார் நம்ம குந்தவைதான் என்கிறது மணிக்கு நெருங்கிய வட்டாரம்.


காதலருக்கு லிப் லாக் அடித்த தமன்னா?

ரொம்ப நாட்களாகவே தமன்னா பற்றிய ஒரு கிசுகிசு அடிப்பட்டு கொண்டிருக்கிறது.
தமன்னா காதல் வயப்பட்டு இருக்கிறார். காதலரும் ஒரு நடிகர். இதுதான் அந்த கிசுகிசு.

பாலிவுட் படமான ‘பாகி 3’, ‘டார்லிங்ஸ்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் விஜய் வர்மா.

நடித்தது என்னவோ ஹிந்திப் படங்கள்தான். ஆனால் விஜய் வர்மா பிறந்து வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்தில்.

தெலுங்குப் படமான ‘எம்.சி.ஏ’-ல் நானிக்கு வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

இந்த விஜய் வர்மாதான் கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னாவுடன் சேர்ந்து பார்ட்டி பண்ணியிருக்கிறார். அப்பொழுது யதேச்சையாக எடுத்த வீடியோவில் விஜயுடன் இருப்பது தமன்னா என்று தெரிய வந்திருக்கிறது.

தமன்னாவும், விஜய் வர்மாவும் இறுக்கி அணைத்தப்படியே லிப் லாக் கிஸ் அடித்திருப்பது இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

தமன்னாவும் விஜய் வர்மாவும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ ஷூட்டிங்கில்தான் முதன் முதலாக சந்தித்து இருக்கின்றனர். ஷூட்டிங் தொடர தொடர இவர்கள் இருவரையும் காதல் பின் தொடர்ந்திருக்கிறது. இப்போது அது லிப் லாக் வரை வந்திருக்கிறது என்கிறார்கள்.


போட்டோவால் சிக்கிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தானா.

விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகாவும் இடையே ஒரு ‘இது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் விஜய் தேவரகொண்டாவோ அல்லது ராஷ்மிகாவோ இதை ஒப்புக்கொள்ளவில்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் மாலத்தீவுக்கு சென்றார்கள். அதே போல் இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே நேரத்தில் தனித்தனியாக ஹைதராபாத்திற்கு வந்தனர்.

இருவரிடமும் டேட்டிங்கா என்று நிருபர்கள் கேட்டதற்கு இருவரும் பதில் சொல்லாமலேயே நழுவி விட்டனர்.

இப்பொழுது புத்தாண்டு கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் விஜய் தேவரகொண்டா ஒரு புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்திருக்கிறார்.

நீச்சல் குளத்திற்குள் நின்றபடியே ஷாம்பெய்ன் பாட்டிலை திறக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் விஜய் தேவரகொண்டா. அந்த போட்டோ விஜய் தேவரகொண்டா 2022 அக்டோபரில் மாலத்தீவுக்கு சென்றிருந்த போது எடுத்த புகைப்படம் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்தப்படி இருக்கிறார்கள்.

அதே லொகேஷனில் ராஷ்மிகா எடுத்த புகைப்படத்தையும் இப்பொழுது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

அதாவது இரண்டு புகைப்படங்களையும் வைத்து, விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா ஒன்றாக தங்கிய போது இருவரும் மாறி மாறி எடுத்துகொண்ட புகைப்படங்கள் என்று இருவருடைய வாயையும் கிளர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...