No menu items!

புத்தாண்டில் புதிய அணி – சாதிப்பாரா ஹர்திக் பாண்டியா?

புத்தாண்டில் புதிய அணி – சாதிப்பாரா ஹர்திக் பாண்டியா?

இந்திய கிரிக்கெட்டில் புதிய எழுச்சி ஏற்பட்ட ஆண்டு 2007. கிரிக்கெட் கதாநாயகர்களாய் இருந்த சச்சின், திராவிட், லக்‌ஷ்மண், கங்குலி, ஜாஹிர் கான் போன்றோரை ஓரம் கட்டிவிட்டு தோனி தலைமையில் புதிதாக ஒரு அணி அந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. கிரிக்கெட் உலகில் பல உச்ச்சங்களை அந்த இளைய அணி பெற்றது.

இப்போது அணிக்கு வயதான நிலையில் 2007-ம் அண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை  ‘ரீசெட்’ பட்டனை அழுத்தி இருக்கிறது பிசிசிஐ.   விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்  பும்ரா, ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாத புதிய இளம் அணியை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது.  2024-ம் ஆண்டு நடக்கவுள்ள்ள டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து தேர்ந்தடுக்கப்பட்டுள்ள இந்த அணி, இன்று முதல் போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடுகிறது. இன்று நடக்கும் போட்டியில் பல விஷயங்களை ரசிகர்கள் ஆவலாக கவனிக்கிறார்கள்.

இன்றைய போட்டியில்  ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இந்தியாவின் தொடக்க ஜோடி இருக்கப் போகிறது. கட்ந்த சில ஆண்டுகளாக ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடித்தான் இந்தியாவின் தொடக்க ஜோடியாக இருந்துவந்தது. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் 6 ஓவர்களில் இந்த ஜோடி அதிரடியாக ஆடாததால் இந்தியாவுக்கு மந்தமான தொடக்கமே கிடைத்தது.

அதை சரிசெய்யும் விதமாக இன்றைய போட்டியில் இஷான் கிஷன் – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களம் இறங்கலாம். இதில் அதிரடியாக ஆட்டத்தை எடுத்துச் செல்லும் பணி இஷான் கிஷனிடம் வழங்கப்பட்டு, கொஞ்சம் நிதானமாக ஆடி இன்னிங்ஸைக் கட்டமைக்கும் பணி ருதுராஜுக்கு வழங்கப்படலாம் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ருதுராஜுக்கு பதில் தீபக் ஹூடாவை இஷானுடன் ஜோடிசேர்த்து இரட்டை குதிரைகளாக பாயலாம் என்ற கருத்தும் இருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவுக்கு இன்று புதிய தொடக்க ஜோடி கிடைக்கப் போகிறது. புதிய தொடக்க ஜோடி ஆட்டத்தை எப்படி அணுகப் போகிறது என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

தொடக்க ஆட்டக்காரர்களுக்கு அடுத்ததாக இளம் பந்துவீச்சாளர்கள் சூழலை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் என்ரு காலம்காலமாய் இருந்த பந்துவீச்சு வரிசை மாற்றப்பட்டு, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக் ஆகிய்யொர் வசம் பொறுப்பு  ஒப்படைக்கப்படலாம். இவர்கள் மூவரில் ஒருவர்கூட 50 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர்கள்.  இளம்கன்று பயமரியாது என்பதைப் போல் இந்த கன்றுகள் பாயுமா அல்லது பதுங்குமா என்பதற்கும் இன்று மாலை விடை தெரியலாம்.

கடைசியாக ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் விஷயம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப். ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ருகொடுத்த பிறகு ஹர்திக் பாண்டியாவின் இமேஜ் இந்தியா முழுக்க உயர்ந்த்கது. அதன்பிறகு சில போட்டிகளில் அவர் பொறுப்பு கேப்டனாக இருந்துள்ளார். அயர்லாந்து, நியூஸிலாந்து தொடர்களில் வெற்றியையும் பெற்றுத் தந்துள்ளார். ஆனால் இப்போது, ‘இனி டி20 போட்டிகளுக்கு நீதான் கேப்டன்’ என்ரு பிசிசிஐ வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் துணை கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பை பாண்டியாவும், சூர்யகுமார் யாதவும்  எப்படி சுமக்கிறார்கள் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

புத்தாண்டில் எல்லாம் சுபமாகி இளம் அணி வெற்றிகளைக் குவிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...